தேசிய கராத்தே அணிக்கு தேர்வு
மதுரை: மத்திய பிரதேசத்தில் குவாலியரில் உள்ள ராம்ஸ்ரீ இந்தியா இன்டர்நேஷனல் பள்ளியில் நவ. 15 முதல் 18 வரை நடக்கவுள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான தேசிய கராத்தே போட்டிக்கான தமிழக அணியில் மதுரை, துாத்துக்குடி, திருநெல்வேலி மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
14 வயதுக்குட்பட்ட 45 கிலோ எடை பிரிவில் ரபேல் ஆண்டனி, 55 கிலோ பிரிவில் ரோஹித் ஹரிவர்ஷன், 17 வயதுக்குட்பட்ட 45 கிலோ எடை பிரிவில் நித்திஷ், 40 கிலோ எடை பிரிவில் பிரணவ் ஆகியோர் தேர்வாகினர். மாணவர்களுடன் சோபுகாய் கோஜூரியோ கராத்தே பள்ளியின் துாத்துக்குடி செயலாளர் முத்துராஜா உடன் சென்றார். இவர்களை மதுரை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இந்திய தலைமை பயிற்சியாளர் சுரேஷ்குமார், பயிற்சியாளர்கள் வழியனுப்பினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பீஹார் தேர்தல் முடிவு; தமிழக தலைவர்களுக்கு பாடம்!
-
பீஹார் தேர்தல்… தேஜ கூட்டணிக்கு அமோக ஆதரவு கிடைத்தது எப்படி? இதுதான் பின்னணி...!
-
பீஹாரில் தேஜ கூட்டணி அமோக வெற்றி; ஓட்டுத்திருட்டு புகார் துாள்துாள்!
-
7 மாநிலங்களில் இடைத்தேர்தல்; 2 தொகுதிகளில் பாஜ, 2 தொகுதிகளில் காங்., முன்னிலை
-
த.வெ.க.,வுடன் கூட்டணிக்கு காங்.,ல் மாவட்ட தலைவர்கள்; 'கிரீன் சிக்னல்' ரகசிய சர்வேயில் 'பளிச்'
-
டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்; இரு டாக்டர்கள் உள்பட மேலும் 5 பேர் கைது
Advertisement
Advertisement