சிந்தனை களம் விஜயை சிந்திக்க வைக்குமா பீஹார் தேர்தல் முடிவுகள்!

வரும் 2026 சட்டசபை தேர்தலில், நடிகர் விஜயின் த.வெ.க., போட்டியிட்டால் என்னவிதமான முடிவை அடையும் என்பதற்கான முன்னோட்டம் இன்று தெரிந்துவிடும்; காரணம் இன்று பீஹார் மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன.

இதில், நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகாகட் பந்தன், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோருடைய ஜன் சுராஜ் ஆகியவை தேர்தல் களத்தில் முன்னணியா க இருந்தவை.

யோசிக்கலாம் தேர்தலுக்குப் பின் எடுக்க ப்பட்ட கருத்துக் கணிப்புகளில், தேசிய ஜனநாயக கூட்டணியே வெல்லும் என சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இவை பொய்த்துப் போய், தேஜஸ்வி யாதவ் வெற்றி பெற வும் வா ய்ப்பு உள்ளது.

பீஹா ர் தேர்தல் முடிவுகள், அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தமிழக தேர்தலுக்கு எப்படி ஒரு முன்னோட்டமாக இருக்கப் போகிறது?

ஒருவேளை மகாகட் பந்தன் கூட்டணி வெற்றி பெற்றால், அது பா.ஜ.,வின் சரிவுக்கான ஆரம்பமாக இருக்கும். இதையொட்டி, தமிழகத்தில் அ.தி.மு.க., தரப்பில், மாற்று சிந்தனை ஏற்படலாம்.

பா.ஜ.,வை ஒரு சுமையாக கருதி, அவர்களோடு உறவை தொடரலாமா என யோசிக்கலாம்.

பா.ஜ.,வோடு இருப்பது சாதகமா, அல்லது த.வெ.க.,வோடு ஒருங்கிணைந்து செல்வது சாதகமா என அ.தி.மு.க., தரப்பில் யோசிக்கக்கூடும்.

ஒருவேளை தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால், அ.தி.மு.க., தான் எடுத்த முடிவு சரிதான் என, தற்போதைய கூட்டணியை தொடரும்.

தி.மு.க., வைப் பொறுத்தவரை, தேஜஸ்வி யாதவ் ஜெயித்தால், அது உற்சாக டானிக். 'நிதிஷ் குமார் பா.ஜ.,வோடு கொண்டுள்ள உறவே காரணம்; அதனாலேயே பீஹார் மக்கள் அக்கூட்டணியை புறக்கணித்து விட்டனர்' எனச் சொல்லி, தி.மு.க., இங்கே அரசியல் செய்யத் துவங்கி விடும்.

தமிழகத்திலும் 'இண்டி' கூட்டணியே வலுவானது என்றும் சொல்லி, அதை கட்டமைக்க தி.மு.க., முயலும்.

எதிர்பார்ப்பது போல, நிதிஷ்குமார் மீண்டும் வெற்றி பெற்று விட்டால், பீஹார் மக்களின் மனநிலை தமிழகத்திலும் ஏற்பட்டு விடக் கூடாது என, தி.மு.க., கடுமையாக உழைக்கத் துவங்கலாம்.

பிஹார் தேர்தல் முடிவுகள் வாயிலாக விஜய்க்கு கிடைக்கும் செய்தி தான் மிகவும் முக்கியமானது.

ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரஷாந்த் கிஷோர், பல மாநில தேர்தல்களில் சூப்பர் ஸ்டாராக இருந்துள்ளார். ஜெகன் மோகன் ரெட்டி, மம்தா பானர்ஜி, ஸ்டாலின் உள்ளிட்டோரை ஆட்சி பீடமேற்றுவதற்கான திட்டமிடலைச் செய்து தந்தவர். அதனாலேயே, அனைவரது பார்வையும், அவர் மீது இருக்கிறது.

முதலிடத்தில் பீஹார் தேர்தலில், அவர் என்ன தாக்கத்தை ஏற்படுத்த போகிறார் என்பதை அரசியல் அரங்கம் உற்று நோக்குகிறது. விஜய் போலவே இவரும் பீஹார் மாநில அரசியலுக்குப் புதியவர். மக்கள் மற்றும் ஊடகங்களால் அதிகம் கவனிக்கப்பட்டவர்.

ஒரு கட்டத்தில், பீஹாரில் வெளியான முதல்வருக்கான, 'பாப்புலராட்டி ரேட்டிங்'கில் இரண்டாம் இடத்தில் இருந்தார். முதல் இடத்தில் தேஜஸ்வி யாதவ் இருந்தார். மூன்றாவது இடத்தில் தான் நிதிஷ்குமார் இருந்தார்.

ஆனால் பிரஷாந்த் கிஷோர், பீஹார் சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை. அதுவே அவரது கட்சியின் உற்சாகத்தை பெருமளவு குறைத்துவிட்டது.

ஒரு கட்டத்தில் பிரஷாந்த் கிஷோர், தமது கட்சியின் வெற்றி பற்றி கூறும்போது, பூஜ்ஜியத்தில் இருந்து 5 இடங்களுக்குள் பெறுவோம். இல்லையேல், 120 இடங்களுக்கு மேல் பெறுவோம் என்றார்.

தேர்தலுக்குப் பிறகான கருத்துக் கணிப்புகளில், அவர் பூஜ்ஜியத்தில் இருந்து, 5 இடங்களுக்குள் பெறக்கூடும் என்று தெரிய வந்துள்ளது. ஆனால், அவர் பெறப் போகும் ஓட்டு சதவீதம் முக்கியமானது.

ஒருவேளை அவர், 5 முதல் 7 சதவீத ஓட்டுகள் பெற்றார் என்றால், அது ஒரு கணக்கு, அதுவே 15 சதவீத ஓட்டுகள் என்றால், அது வேறொரு கணக்கு.

அடுத்தவருக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுப்பதில் கில்லாடியான பிரஷாந்தே, 5ல் இருந்து 7 சதவீதம் தான் பெறுவார் என்றால், விஜய் அந்த எண்ணிக்கையிலோ, அல்லது அதைவிடக் குறைவாகவோ தான் பெறக்கூடும்.

ஏனெனில், மக்கள் மனநிலையை நன்கு புரிந்து கொண்டு, வியூகம் வகுத்துக் கொடுக்கக் கூடிய ஒருவராலேயே தன்னுடைய ஓட்டு சதவீதத்தை கணிசமான அளவுக்கு நிலை நிறுத்த முடியவில்லை என்றால், விஜயால் என்ன செய்து விட முடியும்?

கைகோர்ப்பு விஜயின் த.வெ.க., புரிந்துகொள்ள வேண்டிய பாடம் இங்கே தான் தொடங்குகிறது. கூட்டங்களுக்கு திரளும் இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் திரண்டு வந்து ஓட்டு போடுவர் என கருத முடியாது.

அதுவே, ஜன் சுராஜ், 15 சதவீத ஓட்டுகளை பெற்றுவிட்டால், விஜய்க்கு 22 சதவீத ஓட்டுகள் திரளக்கூடும். அவர் தன்னுடைய அரசியல் பயணத்தில் இன்னும் துணிந்து செயல்படலாம். நாளையே ஆந்திரா பா ணியில், அ.தி.மு.க., வோடு கைகோர்த்து, பழனி சாமியும், விஜயும் இன்னொரு சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகலாம்.




ஆர்.வெங்கடேஷ்

பத்திரிகையாளர்

Advertisement