சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு

கடலுார்: மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த, 106 போலீசாருக்கு எஸ்.பி., பரிசு மற்றும் சான்றிதழ், வழங்கி பாராட்டினார்.

கடலுார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாதாந்திர குற்றத்தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நடந்தது. எஸ்.பி.,ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல்,நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்தல் குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு, எஸ்.பி.,அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து அக்டோபர்மாதத்தில் மாவட்ட போலீஸ்துறையில் சிறப்பாக, பணிபுரிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கதிரவன், அம்பேத்கர், பாரதி, செந்தில்குமார், உதயகுமார்,சிவபிரகாசம், பாஸ்கர், நந்தகுமார், ரவிச்சந்திரன், சந்திரன், கவிதா, சப்இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தகுமார், கவியரசன், பிரசன்னா, பாலமுருகன்,சுரேஷ்முருகன், செந்தில்குமார், சக்திவேல், திவாஷ், செல்வகுமார், பரந்தாமன், நடராஜன், மணிகண்டன், செல்வபாண்டியன், பிரேம்குமார், தவச்செல்வம், சிவராமன் மற்றும் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்கள், தலைமைக்காவலர்கள், போலீசார் உள்ளிட்ட, 106 பேருக்கு எஸ்.பி.,ஜெயக்குமார் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார். கூட்டத்தில் ஏ.டி.எஸ்.பி.,க்கள் கோடீஸ்வரன், ரகுபதி மற்றும் டி.எஸ்.பி.,க்கள் உள்ளிட்டோர்பங்கேற்றனர்.

Advertisement