தட்டாஞ்சாவடி, காமராஜர் நகர் தொகுதியில் கணக்கெடுப்பு படிவம் ஓட்டுச்சாவடியில் பெறலாம்
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி மற்றும் காமராஜர் நகர் தொகுதிகளில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் இதுவரை கிடைக்கப் பெறாதவர்கள் நாளை மற்றும் நாளை மறுநாளும் அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம் என, வாக்காளர் பதிவு அதிகாரி அர்ஜூன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் ஒரு பகுதியாக நாளை மற்றும் நாளை மறுநாள் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்) தட்டாஞ்சாவடி மற்றும் காமராஜர் நகர் தொகுதிகளுக்கு உட்பட்ட பி.எல்.ஓ.,க்கள் அந்தந்த ஓட்டுச்சாவடியில் இருப்பார்கள். இதுவரை, கணக்கீட்டு படிவங்களை பெறாதவர்கள் தங்கள் பகுதி ஓட்டுச்சாவடிக்கு சென்று, அங்குள்ள ஓட்டுச்சாவடி அலுவலரிடம் இருந்து படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த படிவங்களை அவர்களிடமே சமர்ப்பிக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
பீஹார் தேர்தல் முடிவு; தமிழக தலைவர்களுக்கு பாடம்!
-
பீஹார் தேர்தல்… தேஜ கூட்டணிக்கு அமோக ஆதரவு கிடைத்தது எப்படி? இதுதான் பின்னணி...!
-
பீஹாரில் தேஜ கூட்டணி அமோக வெற்றி; ஓட்டுத்திருட்டு புகார் துாள்துாள்!
-
7 மாநிலங்களில் இடைத்தேர்தல்; 2 தொகுதிகளில் பாஜ, 2 தொகுதிகளில் காங்., முன்னிலை
-
த.வெ.க.,வுடன் கூட்டணிக்கு காங்.,ல் மாவட்ட தலைவர்கள்; 'கிரீன் சிக்னல்' ரகசிய சர்வேயில் 'பளிச்'
-
டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்; இரு டாக்டர்கள் உள்பட மேலும் 5 பேர் கைது