பீஹார் சட்டசபை தேர்தல்: முந்தியது தேஜ கூட்டணி
பாட்னா: பீஹாரில் 243 சட்டசபை தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று (நவம்பர் 14) காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி, தேஜ கூட்டணி 130 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆர்ஜேடி தலைமையிலான மஹாகட்பந்தன் கூட்டணி 65 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 243 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடந்தது. கடந்த, நவ.,6ல், 121 தொகுதிகளில் நடந்த முதற்கட்ட தேர்தலில், 65 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
மீதமுள்ள 122 தொகுதிகளில், நவ., 11ம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில், 67.14 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இரண்டு கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று (நவம்பர் 14) காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன.
காலை 9 மணி நிலவரப்படி,
மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை-243
தேஜ கூட்டணி (பாஜ, ஐக்கிய ஜனதா தளம் (நிதிஷ் குமார் கட்சி)- 130
மஹாகட்பந்தன் கூட்டணி (ஆர்ஜேடி, காங்கிரஸ்)- 65
ஜன் சுராஜ் (பிரசாந்த் கிஷோர் கட்சி)- 3
மற்றவை-2
கருத்துக்கணிப்புகள் பலிக்குமா?
ஓட்டுப்பதிவு முடிந்ததும், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின. இதில் பெரும்பாலான கணிப்புகள், பா.ஜ.. தலைமையிலான தே.ஜ., கூட்டணியே மீண்டும் ஆட்சிக்கு வரும் என தெரிவித்துள்ளன. இந்த சூழலில் கருத்துக்கணிப்பு பலிக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
காங்கிரஸ் தனி மெஜாரிட்டியில் ஆட்சி அமைக்கும். சுடாலின் வெற்றி விழாவில் பங்கேர்பார்.மேலும்
-
த.வெ.க.,வுடன் கூட்டணிக்கு காங்.,ல் மாவட்ட தலைவர்கள்; 'கிரீன் சிக்னல்' ரகசிய சர்வேயில் 'பளிச்'
-
டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்; இரு டாக்டர்கள் உள்பட மேலும் 5 பேர் கைது
-
மாற்றத்தை உருவாக்கும் உண்மை 'தினமலர்'
-
ஒரு மதத்தை சார்ந்தோரே பயங்கரவாதிகள்
-
தட்டாஞ்சாவடி, காமராஜர் நகர் தொகுதியில் கணக்கெடுப்பு படிவம் ஓட்டுச்சாவடியில் பெறலாம்
-
சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு