பீஹாரில் தேஜ கூட்டணி அமோக வெற்றி; ஓட்டுத்திருட்டு புகார் துாள்துாள்!
நமது சிறப்பு நிருபர்
பீஹார் தேர்தலில் தேஜ கூட்டணி அமோக வெற்றி பெறும் நிலையில் உள்ளது. காலை 11 மணி நிலவரப்படி 185 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இண்டி கூட்டணி கட்சிகள், முந்தைய தேர்தலில் வெற்றி பெற்ற இடங்களை கணிசமாக இழந்துள்ளன. ராகுல் தெரிவித்த ஓட்டுத்திருட்டு புகார், இந்த தேர்தல் முடிவுகளின் மூலம் துாள் துாளாகியுள்ளது.
பீஹார் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டமாக நடந்த தேர்தலில் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்த தேர்தலில் தேஜ கூட்டணி ஒரு அணியாகவும், இண்டி கூட்டணி ஒரு அணியாகவும் போட்டியிட்டன. தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி தனியாக அனைத்து தொகுதியிலும் போட்டியிட்டது.
பீஹார் சட்டசபையில் மொத்தம் 243 இடங்கள் உள்ளன. தனிப்பெரும்பான்மைக்கு 122 இடங்கள் மட்டும் போதுமானது. காலை 11 மணி ஓட்டு எண்ணிக்கை நிலவரப்படி பாஜ- ஐக்கிய ஜனதாதளம் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி, 185 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறும் நிலையில் உள்ளது.
இண்டி கூட்டணி கட்சிகள், கடந்த தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்ற இடங்களையும் இழந்துள்ளன. இப்போது வெறும் 54 இடங்களில் மட்டுமே முன்னணியில் உள்ளன.
ஜன் சுராஜ் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே முன்னணியில் உள்ளது. பீஹார் மாநில தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுல், ஓட்டுத்திருட்டு புகாரை பெரிதாக முன்னிலைப்படுத்தினார்.
லட்சக்கணக்கான வாக்காளர்கள், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.இந்த குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்தது. எனினும், ராகுல் அந்த புகார்களை தொடர்ந்து தெரிவித்து வந்தார். அவர் தெரிவித்த புகார்களை, பீஹார் மாநில வாக்காளர்கள் பொருட்படுத்தவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டுவதாக உள்ளன என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வாசகர் கருத்து (7)
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
14 நவ,2025 - 11:19 Report Abuse
வோட்டு திருட்டு நிஜம். இந்த முறை பிஹாரில் வெற்றி பெற முடியாது என்று தெரிந்து ஓட்டுக்களை நீக்கி விட்டார்கள். 0
0
Reply
ஆரூர் ரங் - ,
14 நவ,2025 - 11:15 Report Abuse
இனிமேலும் இன்டி கூட்டணி சிறுபான்மையினரை ஏமாற்ற முடியாது. முஸ்லிம்கள் அதிகமுள்ள தொகுதிகளில் கூட பிஜெபி கூட்டணி பெரிய வெற்றி. 0
0
Reply
KOVAIKARAN - COIMBATORE,இந்தியா
14 நவ,2025 - 11:14 Report Abuse
பீஹாரில் தேஜ கூட்டணி அமோக வெற்றி பெறும் என்பது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். அதைப்போலவே, தமிழகத்தில் திருட்டு தீய திமுகவையும், மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் திருட்டு TMC யும் வரும் 2026 தேர்தலில் தோற்கடித்து தேஜ கூட்டணி அமோக வெற்றி பெறவேண்டும். 0
0
Reply
Rama Chandran - chennai,இந்தியா
14 நவ,2025 - 11:11 Report Abuse
ஓட்டு திருட்டு தூள் தூள் ஆகவில்லை. ஓட்டு திருட்டு நிருபனம் ஆகிவிட்டது. 0
0
எஸ் எஸ் - ,
14 நவ,2025 - 11:18Report Abuse
மகாபந்தன் முன்னிலையில் உள்ள தொகுதிகளில் ஓட்டு திருட்டு நடக்கவில்லையா? 0
0
Thravisham - Bangalorw,இந்தியா
14 நவ,2025 - 11:24Report Abuse
அப்பாடி இன்னிக்கி குவாட்டர்/ஊசிப் போன பிரியாணி, 200ரூவா காரண்டி 0
0
Reply
எஸ் எஸ் - ,
14 நவ,2025 - 11:08 Report Abuse
ஓட்டு திருட்டு காரணமாகத்தான் இந்த வெற்றி என்று ஒரு கூட்டம் இன்று இரவு தமிழ் தொலைக்காட்சிகளில் குரைக்கும் பாருங்கள்... தமாஷாக இருக்கும் 0
0
Reply
மேலும்
-
பீஹார் சட்டசபை தேர்தலில் பூஜ்யம்; பிரசாந்த் கிஷோருக்கு பெருத்த ஏமாற்றம்!
-
குடும்ப அரசியலை வெறுத்து ஒதுக்கிய பீஹார் மக்கள்!
-
வேப்பம்பூ ஜூஸ், முருங்கை ரொட்டி: பிரதமர் மோடியின் உணவுப் பழக்கமும்.. ஆரோக்கியத்தின் ரகசியமும்...
-
பீஹார் தேர்தலில் சாதனை படைத்த பாஜ!
-
பீஹார் தேர்தல் முடிவு; தமிழக தலைவர்களுக்கு பாடம்!
-
பீஹார் தேர்தல்… தேஜ கூட்டணிக்கு அமோக ஆதரவு கிடைத்தது எப்படி? இதுதான் பின்னணி...!
Advertisement
Advertisement