பீஹார் தேர்தல் முடிவு; தமிழக தலைவர்களுக்கு பாடம்!
நமது நிருபர்
ஓட்டுத்திருட்டு புகார்களை மட்டுமே சொல்லி மக்களது ஓட்டுக்களை பெற்று விடலாம் என்ற இண்டி கூட்டணி கட்சிகளின் திட்டத்தை பீஹார் மக்கள் ஒட்டு மொத்தமாக புறக்கணித்துள்ளனர். இது, தமிழக அரசியல் கட்சித்தலைவர்களுக்கான பாடம் என்கின்றனர், அரசியல் ஆய்வாளர்கள்.
பீஹார் மாநில தேர்தல் பிரசாரத்தில், வேறு எந்த விவகாரத்தையும் விட ஓட்டுத்திருட்டு பிரசாரத்தையே இண்டி கூட்டணி கட்சிகள் அதிகம் பேசின. காங்கிரஸ் தலைவர் ராகுல், லாலு மகன் தேஜஸ்வி இருவரும் ஊர் ஊராக பேரணி சென்றனர். செல்லும் இடங்களில் எல்லாம், ஓட்டுத்திருட்டு பற்றியே பேசிப் பேசி வாக்காளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தினர்.
உண்மையில் ஓட்டுத்திருட்டு என்ற ஒன்று கிடையவே கிடையாது என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியும் அதை அவர்கள் ஏற்கவில்லை. இறந்து போன வாக்காளர்கள், இரட்டைப்பதிவு இருக்கும் வாக்காளர்கள், இடம் பெயர்ந்தவர்கள் பெயர்கள் மட்டுமே வாக்காளர்கள் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால் நீக்கப்பட்டனர்.
இதைத்தான் ஓட்டுத்திருட்டு என்று கூப்பாடு போட்டு இண்டி கூட்டணி ஒப்பாரி வைத்தது. இதை, பீஹார் மாநில மக்கள் முற்றிலும் புறக்கணித்து விட்டனர் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
இந்த முடிவுகள், அதே போன்ற ஓட்டுத்திருட்டு பிரசார அரசியலை கையில் எடுக்கும் திமுக கூட்டணிக் கட்சிகள் கவனிக்க வேண்டிய ஒன்றாகும் என்கின்றனர், அரசியல் ஆய்வாளர்கள்.பிற மாநிலங்களில் செய்வதை போலவே, தமிழகத்திலும் வாக்காளர் பட்டியலில் மாற்றம் செய்து விடுவார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலினும், கூட்டணி கட்சிகளும் பேசத் தொடங்கியுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
அபாண்டமாக பேசியவர்களுக்கு பீஹார் மாநில வாக்காளர்கள் அளித்திருக்கும் முடிவு, நிச்சயம் தமிழக அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் தான் என்கின்றனர், அரசியல் பிரமுகர்கள்.
2001 சட்டசபை தேர்தல் தீயமூக ஆட்சிக்கு பின் ஜெயித்த தொகுதி 31. 2011 சட்டசபை தேர்தல் தீயமூக ஆட்சிக்கு பின் ஜெயித்த தொகுதி 23, இதே கணக்கு படி பார்த்தல் 2026 சட்டசபை தேர்தல் தீயமூக ஆட்சிக்கு பின் ஜெயிக்க போகும் தொகுதி 15, தீயமூக கட்சி ஆரம்பித்தபோது ஜெயித்த தொகுதி 15 . வாழ்க்கை
ஒரு வட்டம் கடவுள் இருக்கான் குமாரு ....
தமிழனை பீகாரியைப் போல் ஏமாற்றி வெல்ல முடியாது. தமிழன் வெற்றி பெற
பிறந்தவன். அவனை வாக்காளர் அட்டை சீர் திருத்தம் என்ற ஆயுதத்தால் வீழ்த்த முடியாது. தமிழனை அழிக்க சதி திட்டம் நடக்கிறது. அதை இந்த இயக்கம் தவிடு பொடியாக்கும்
பிகாரில் நிதிஷ் முழு மது விலக்கு செய்ததால் மக்களை சிந்திக்க வைத்துள்ளார். ஆனால் தமிழகத்திலே திராவிட மாடல் டாஸ்மாக் அடிமைகளை உருவாக்கி கொள்ளை அடிக்கிறது. இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்...இந்த தமிழ் நாட்டிலே
மக்களின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சி இது வளர்ச்சிக்கான தேர்வு.தலைவர்களின் குடும்ப வளர்ச்சியை மக்கள் விரும்பவில்லை விரும்ப மாட்டார்கள் இங்கேயும் அது பொருந்தும்.
ஓட்டு திருட்டு என்று பேசியது, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அல்லக. தோற்க்கத்தான் போகிறோம் என்று தெரிந்த பின்னர், தங்கள் முகத்தை காப்பாற்றிக் கொள்ள, முன் கூட்டிய முயற்சி. தமிழகத்திலும் அதுவே. திமுக, தாங்கள் தோற்றால், பிஜேபியை எப்படி தூற்றுவது என்று ஒத்திகை பார்க்கிறார்கள்.
தமிழர்களுக்கு பீஹாரிகளைத் தெரிந்த அளவுக்கு பீஹாரிகளுக்கு தமிழர்களைத் தெரியாது என்பது தான் யதார்த்தம் எனவே தமிழக அரசியல் முடிவுகளை பீஹார் தேர்தல் பாதிக்காது
தமிழகத்திலும் ஆளும் கட்சி தான் ஜெயிக்கும் தலைவரே - கவலைப் படாதீங்க - என்று உடன் பிறப்புகள் தலைவருக்கு தைரியம் சொல்லலாம்!
பீகார் மக்கள் தேசப்பற்று உள்ளவர்கள் என்பதை ஆணித்தரமாக நிரூபித்துள்ளார்கள். தமிழ்நாடும் சிந்தித்து ஓட்டு போட்டால் நல்லது. இல்லையென்றால் விடியாத ஆட்சியின் கீழ் போதை கும்பல்களின் ஆட்சி தமிழ்நாட்டை ஏற்கனவே நாசம் செய்தாகிவிட்டது.
ஒட்டு திருட்டு வசனம் பேசியது என்ன ஆச்சு ?ஆட்டம்பாம் வெடிக்கும் ஹைட்ரஜன் பாம் வெடிக்கும் என்று சொல்லி கடைசியில் ஒன்றும் காணாமே பப்பு
காத்து வரல
வாக்கு எப்போதும் இலவச, ...மாடெலுக்கேமேலும்
-
பீஹார் தேர்தல் முடிவுகள்: முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ், நயினார் கருத்து
-
2020ல் ஒன்றே ஒன்று; 2025ல் 22 இடம்; கூட்டணியால் உச்சம் பெற்ற சிராக் பஸ்வான்
-
பீஹார் தேர்தல்: தேஜஸ்விக்கு தன் பலத்தை காட்டிய ஒவைசி!
-
பீஹாரில் நிதிஷ் குமார் வெற்றி வாகை சூட காரணமான ஐந்து விஷயங்கள்!
-
பீஹாரில் கிடைத்தது அமோக வெற்றி; பாஜவின் அடுத்த இலக்கு மேற்கு வங்கம்!
-
பீஹார் சட்டசபை தேர்தலில் பூஜ்யம்; பிரசாந்த் கிஷோருக்கு பெருத்த ஏமாற்றம்!