பீஹார் தேர்தலில் சாதனை படைத்த பாஜ!
நமது நிருபர்
பீஹார் தேர்தலில், மற்ற அனைத்து கட்சிகளையும் விட, பாஜ வேட்பாளர்களின் வெற்றி சதவீதம் அதிகம் என்று தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன.
பீஹார் மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.,- ஐக்கிய ஜனதாதளம், சிராக் பாஸ்வானின் லோக்ஜன் சக்தி உள்ளிட்ட கட்சிகள் தேஜ கூட்டணியில் போட்டியிட்டன. இதில் மற்ற அனைத்து கட்சிகளையும் விட, பாஜவின் வெற்றி- முன்னிலை சதவீதம் அதிகமாக இருப்பது, அக்கட்சியினரை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
மொத்தம் 101 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜ 88 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இது, 87 சதவீதம் வெற்றியாகும்.
இது, பிரதமர் மோடி மீது, பீஹார் மாநில மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக உள்ளது என்கின்றனர், அரசியல் ஆர்வலர்கள். கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளம் 78 சதவீதம் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. லாலுவின் ஆர்ஜேடி வெறும் 20 சதவீதம், காங்கிரஸ் வெறும் 8 சதவீதம் மட்டுமே வெற்றி பெறும் பரிதாப நிலையில் உள்ளன.
கடந்த சட்டமன்றத்தில் லாலுவின் ஆர்ஜேடி 75 எம்.எல்.ஏ.,க்களுடன் இருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு 19 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர். இப்போது அந்த இடங்களை கூட எதிர்க்கட்சிகளால் கைப்பற்ற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
@quote@
2025 பீஹார் தேர்தல்quote
கட்சி -போட்டி -முன்னிலை- வெற்றி சதவீதம்
* பாஜ- 101- 88- 87 சதவீதம்
* ஐஜத- 101- 79- 78 சதவீதம்
* ஆர்ஜேடி 143- 30- 20 சதவீதம்
* காங்கிரஸ் 61- 5- 8 சதவீதம்
பிகாரில் நிதிஷ் முழு மது விலக்கு செய்ததால் மக்களை சிந்திக்க வைத்துள்ளார். ஆனால் தமிழகத்திலே திராவிட மாடல் டாஸ்மாக் அடிமைகளை உருவாக்கி கொள்ளை அடிக்கிறது. இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்...இந்த தமிழ் நாட்டிலே?
பெரும்பான்மையன இடங்களை பிஜேபி வென்றுள்ளதால், பிஜேபி ஆட்சி அமைக்குமா? யார் முதலமைச்சர் ?
எதிர் கட்சிகளுக்கு தற்போது ஒரே எண்ணம். பி ஜெ பி யை தோற்கடிக்க வேண்டுமென்றால் 2026 பொது தேர்தலுக்கு தேர்தல் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலக்கவேண்டுமா என்பதுதான்.
வழக்கம்போல காரணம் இருக்கவே இருக்கு EVM ஏசி, இப்போ சார் ..
ஹிந்துக்கள் ஒட்டு ஒட்டுமொத்தமாக consolidated ஆகி இருக்கு இது தொடரும்
விரைவில் திருடர்கள் காணாமல் போவார்கள்.
காங்கிரஸ் காணாமல் போவதற்கு அதிக நாட்கள் இல்லை
வாழ்க மோடிஜி ஜெய்ஹிந்
பீகார் மக்கள் தேசப்பற்று மிக்கவர்கள். தாமரை மலரும்.
எல்லாம் SIR ஆல் வந்த வினை! உண்மை ஓட்டு உள்ளவர்கள் மட்டுமே வாக்களிக்க வேண்டும், ஓட்டுக்கு துட்டு கிடையாது, ஜாதி மத வாதங்கள் எடுபடாது - ஜன நாயக முறைப்படி - ஓட்டு திருட்டு வாதம் கூட செல்லாது - , கிட்ட தட்ட எழுபது சதவிகித மக்கள் வாக்களித்தால்? இது மாதிரி தான் நடக்கும்
EVM மற்றும் ஓட்டு திருட்டு அப்டின்னு ஏற்கனவே பிட்டு போட்டு வைத்து ஆகிவிட்டது. மறுபடியும் மக்களை கேவலமான முறையில் நடத்துவது தான் இன்டி கூட்டணியின் சாதனைமேலும்
-
பீஹார் என்றால் நிதிஷ்... புலி இன்னும் உயிருடன்தான் உள்ளது: நிதிஷை வாழ்த்தி ஒட்டப்படும் போஸ்டர்கள்
-
பீஹார் தேர்தல் முடிவுகள்: முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ், நயினார் கருத்து
-
2020ல் ஒன்றே ஒன்று; 2025ல் 22 இடம்; கூட்டணியால் உச்சம் பெற்ற சிராக் பஸ்வான்
-
பீஹார் தேர்தல்: தேஜஸ்விக்கு தன் பலத்தை காட்டிய ஒவைசி!
-
பீஹாரில் நிதிஷ் குமார் வெற்றி வாகை சூட காரணமான ஐந்து விஷயங்கள்!
-
பீஹாரில் கிடைத்தது அமோக வெற்றி; பாஜவின் அடுத்த இலக்கு மேற்கு வங்கம்!