குடும்ப அரசியலை வெறுத்து ஒதுக்கிய பீஹார் மக்கள்!
நமது சிறப்பு நிருபர்
வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை என்று வாக்குறுதி அளித்தும் லாலுவின் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. குடும்ப அரசியல், ஊழல், காட்டாட்சியை வாக்காளர்கள் விரும்புவதில்லை என்பதை நிரூபணம் செய்யும் வகையில், பீஹார் மாநில தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
பீஹாரில் மீண்டும் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. இதற்கு, தேஜ கூட்டணி மக்களுக்கு வழங்கிய பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ததை முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அதேநேரத்தில் ஆர்ஜேடி கட்சியின் தோல்விக்கு குடும்ப அரசியலே காரணம் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மக்கள் ஆட்சி அதிகாரத்தை வழங்கியபோது லாலு பிரசாத் தனது மனைவிக்கு முதல்வர் பதவியை வழங்கினார். மகளுக்கு எம்.பி., பதவி வழங்கினார். இரண்டு மகன்களுக்கும் துணை முதல்வர் பதவி வழங்கினார். அவரது உறவினர்கள் பலர், பல்வேறு பொறுப்புகளில் மாநிலத்தை சீரழித்தனர்.
அதுமட்டுமின்றி அரசு அலுவலகங்களில் எங்கு பார்த்தாலும் அவரது சமூகத்தை சேர்ந்தவர்களே ஆதிகம் செலுத்தினர். இதில் மக்கள் அடைந்த அதிருப்தி தான், அந்த கட்சியினரை படுதோல்வி அடையச் செய்துள்ளது. லாலு முதல்வராக இருந்தபோது நடந்த கால்நடைத்தீவன ஊழல், அரசு வேலைக்கு இடத்தை லஞ்சமாக பெற்றது போன்றவை, மாநில மக்கள் நினைவில் இன்னும் பசுமையாக இருக்கின்றன.
இந்த ஊழல்களுக்காக, லாலுவும் அவரது குடும்பத்தினரும் இன்னும் நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய அரசியலால் தான் பீஹார் மக்கள் லாலு பிரசாத் தலைமையிலான ஆர்ஜேடி கட்சியை புறக்கணித்து உள்ளனர். அதுமட்டுமின்றி லாலுவின் இன்னொரு மகன் தேஜ் பிரதாப் தனிக்கட்சி ஆரம்பித்து, தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார்.
ஊழல் செய்து சம்பாதித்த பணத்தை தாறுமாறாக செலவழித்து அட்டகாசம் செய்யும் அவரது செயல்பாடுகள், லாலுவின் குடும்பத்துக்கு ஏற்கனவே இருந்த மிச்சம் மீதி பெயரையும் கெடுத்து ஒழிப்பதாக உள்ளன. இது போதாது என்று அவர் குடும்ப அரசியல் பின்னணியில் முன்னணிக்கு வந்துள்ள ராகுலுடன் தேஜஸ்வி யாதவ் கைகோர்த்து இருந்தார்.
இத்தகைய காரணங்களால் தான், ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு அரசு வேலை கொடுப்போம் என தேஜஸ்வி யாதவ் கூறியிருந்தும் தேர்தலில் அவருக்கு பலன் கிடைக்கவில்லை. வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை என்றால் என்ன செலவாகும் என்று கணக்கு தெரியுமா என்று பாஜ தலைவர்கள் பிரசாரத்தில் கேள்வி எழுப்பியது, பீஹார் மக்கள் மனதில் அப்படியே பதிந்து விட்டது.
இதனால், தேஜஸ்வி கூறியது பொய் வாக்குறுதி என்று வாக்காளர்கள் நம்பி விட்டனர். இதன் காரணமாகே அவரது கட்சி, போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் தோல்வி முகத்தில் உள்ளன.
தமிழர்களை விட, திராவிடர்களை விட நன்கு சிந்தித்து வாக்களிப்பவர்களா பீகாரிகள் ????
Tamil Nadu is being ruled by the Karunainidhi Dynasty DMK despots for the past 58 long years. Tamilians should unitedly kick the DMK out of the northern borders Tamil Nadu past Sullurupeta and save our future generation children.
எதெற்கெடுத்தாலும் வடக்கு வடக்கு கத்துனேன்களே இப்ப பாரு அவர் தெளிவா குடும்பத்தை ஒதுக்கிட்டாங்க நாம இன்னும் கொத்தடிமையா இருக்கோம்
பிகாரில் நிதிஷ் முழு மது விலக்கு செய்ததால் மக்களை சிந்திக்க வைத்துள்ளார். ஆனால் தமிழகத்திலே திராவிட மாடல் டாஸ்மாக் அடிமைகளை உருவாக்கி கொள்ளை அடிக்கிறது
பீகார் வாக்காளர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற சாத்தியம் இல்லாத வாக்குறுதியை நம்பாமல் நல்ல தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
இவ்வளவு தெளிவாக சிந்திக்கும் இவர்களை கிண்டல் செய்கின்றனர் தமிழ் நாட்டு அரசியல்வாதிகள்!
வரும் காலங்களில் குடும்ப அரசியலை மக்கள் முற்றிலும் புறக்கணிப்பார்கள். எடுத்துக்காட்டு காங்கிரஸ், லாலு ....................
அட அட நம் முதல்வர் சென்றுமா காங் லாலு கட்சி தோல்வி அடைந்தது ?
ஜெயிக்க போன குதிரையை தோற்க அடித்த பெருமை நமது முதல்வருக்கு தான் உண்டு .அங்க நம்ம ஆளுங்க பீஹாரிய திட்டினது நல்ல ஓடுச்சு , விடியலாரின் நண்பர் கிஷோர் வாங்கிய வோட்டு கூடி இருந்தால் பிஜேபி தோற்று இருக்கும்
ஒருபக்கம் முடிவுகளை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தாலும், லாலு குடும்பத்திற்கு கிடைத்த வோட்டு சதவிகிதத்தை பார்க்கும்போது மிரட்சியாக இருக்கிறது அந்த மாநிலத்தில் அவர்கள் செய்யாத ஊழல்கள் இல்லை, அக்கிரமங்கள் இல்லை, மாநிலமே வளர்ச்சியற்று மிகவும் மோசமான பின்தங்கிய நிலையில் விழ முக்கிய காரணம் அந்த குடும்பத்தின் காட்டாச்சிதான். அது அங்குள்ள மக்களுக்கும் நன்றாகவே தெரியும்.
அப்படியிருந்தும், ஜாதியின் அடிப்படையில் மத வெறுப்பின் அடிப்படையில் 24% மக்கள் அந்த கட்சிக்கு வாக்களித்திருப்பதை காணும்போது, நம் நாடு ஏன் ஒரு ஜப்பான் போன்றோ சீனா போன்றோ வளரவில்லை என்பதை உணர முடிகிறது. தமிழகத்திலும் மக்கள் தெளிவடைந்து திருட்டு கும்பல் ஆட்சியை துரத்திவிட்டு ஒரு நல்ல தலைமைக்கு வாக்களிக்கும் மனநிலைக்கு வந்தார்கள் என்றால், மாநிலம் முன்னேறுவதோடுமட்டும் இல்லாமல், நாம் மறந்த இழந்த பழைய பெருமைமிக்க பல அடையாளங்களை மீட்டு தமிழ் உலகத்தின் பெருமைகளை மற்றவர்களுக்கு பறை சாற்றலாம்.
வட தமிழர்கள் கிண்டல் செய்தாலும் அவர்கள் தெளிவாக ஊழல் செய்யாத லஞ்சம் வாங்காத மோடிஜியின் தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்துள்ளார்கள். ஆனால் இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலம் என்று தங்களை தாங்களே புகழ்ந்துகொள்ளும் டுமிழர்கள் ஒவ்வொரு முறையும் ஊழலிலும் லஞ்சத்திலும் ஊறிப்போன கட்டுமர திருட்டு திமுகவிற்கு வாக்களித்து தங்களை ஆள வைத்து அழகு பார்க்கிறார்கள். விளங்கிடும் தமிழ்நாட்டின் எதிர்காலம்.மேலும்
-
மாமல்லபுரம் அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது
-
பீஹார் என்றால் நிதிஷ்... புலி இன்னும் உயிருடன்தான் உள்ளது: நிதிஷை வாழ்த்தி ஒட்டப்படும் போஸ்டர்கள்
-
பீஹார் தேர்தல் முடிவுகள்: முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ், நயினார் கருத்து
-
2020ல் ஒன்றே ஒன்று; 2025ல் 22 இடம்; கூட்டணியால் உச்சம் பெற்ற சிராக் பஸ்வான்
-
பீஹார் தேர்தல்: தேஜஸ்விக்கு தன் பலத்தை காட்டிய ஒவைசி!
-
பீஹாரில் நிதிஷ் குமார் வெற்றி வாகை சூட காரணமான ஐந்து விஷயங்கள்!