பீஹார் சட்டசபை தேர்தலில் பூஜ்யம்; பிரசாந்த் கிஷோருக்கு பெருத்த ஏமாற்றம்!
பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலில் 238 இடங்களில் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிக்கு ஒரு இடம் கிடைக்கவில்லை. இது அவரது கட்சியினருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீஹார் சட்டசபை தேர்தலில் கருத்துக்கணிப்புகளில் சொன்னதை விட கூடுதல் தொகுதிகளில் தேஜ கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மொத்தம் உள்ள 243 இடங்களில் 200க்கு மேற்பட்ட இடங்களில் பாஜ, ஜேடியு கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. ஆரம்பத்தில் 76 இடங்கள் வரை முன்னிலையில் இருந்த ஆர்ஜேடி தலைமையிலான மஹாகட்பந்தன் கூட்டணி, அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்து, தற்போது 37 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
இந்தத் தேர்தலில் தேஜ கூட்டணி, மஹாகட்பந்தன் கூட்டணியை கடந்து, பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அவரது கட்சி 238 தொகுதிகளில் தனித்து களம் கண்டது. சட்டசபை தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட இவரது கட்சி, தேஜ கூட்டணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கு தகுந்தபடி மாநிலம் முழுவதும் 3 ஆயிரம் கிலோமீட்டர் பேரணி சென்று பிரசாரத்தை செய்தார் பிரசாந்த் கிஷோர். செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல கூட்டமும் கூடியது.
இதனால் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தார் அவர். ஆனால், இந்தத் தேர்தலில் ஒரு இடத்திலும் ஜன் சுராஜ் கட்சி முன்னிலை பெறாதது, அக்கட்சியின் தொண்டர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் கூட பிரசாந்த் கிஷோரின் கட்சிக்கு 2 முதல் 4 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், அதுவும் கிடைக்காமல் போனது.
இந்தத் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஜக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் அரசியலை விட்டு விலகுவேன் என்று பிரசாந்த் கிஷோர் சவால் விடுத்திருந்தார்.
தற்போது, நிதிஷ் குமாரின் கட்சி 75 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம், பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலத்தை நிதிஷ்குமார் முடித்து விட்டார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
ஜோசியக்காரனுக்கு சொந்த வாழ்வில் ஜோசியம் பலிக்காது என்பார்கள்.
நல்ல கதறல். உங்களை கதற விட்டு விடியல் தீ தீ இருவரும் இந்த ஆரியனை விட்டால் வேறு எந்த வழியும் இல்லை. அவர்கள் மறுபடியும் 380 கோடி குடுப்பார்கள் நம் வரிப்பணம்...சும்மா வெளியே ஆரியன் ஒழிக அப்டின்னு உங்களுக்கு பிஸ்கட் படுவார்கள்...
செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல கூட்டமும் கூடியது. இதனால் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தார் அவர்.. இது த.வெ.கவிற்கும் ஒரு பாடம்.. மிகவும் அதிக நேர்மையுடனும் மத ஜாதி அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்கவேண்டும்...
Vijay is Prashant Kishore of Tamil Nadu
மக்களை ஏமாற்ற முடியாது. உண்மை அவர்கள் அறிவார்கள். நாட்டின் நலம் தான் முக்கியம் என்று நினைத்து ஓட்டு போட்டுள்ளார்கள் ஜெய் ஹிந்த்
கிஷோர் சூத்திரமாக ஆளும் கட்சியின் எதிரான வாக்குகள் காங்கிரஸ் கூட்டணிக்கு செல்லாமல் அருமையாக பார்த்து கொண்டார்
எல்லாம் over confidence.
பரிட்சையில் காங்கிரஸ் தேர்வு பெற தவறியதுடன் எல்லா பாடங்களில் தேர்வு பெறவில்லை. மீண்டும் தேர்வு எழுதுவதை தவிர்த்து தெரு ஓரத்தில் ஒதுங்கி இருப்பது நல்லது. பாசிட்டிவ் எண்ணம் உள்ள தலைமை தேவை. தமிழ்நாட்டில் ஸ்டாலின் அரசியல் மனப்பான்மை மாறும். காங்கிரஸ் என்ற தூசி உடலில் ஒட்டிகொண்டுஇருக்கிறது தட்டுவதா கூடாத என்ற நிலையில் நல்ல முடிவை பொறுத்து அவர் 2026 தேர்தலில் இறங்கவேண்டும்.
தமிழ்நாட்டு இந்துக்கள் சாபம் சும்மாவிடாது
Vijay should take a cue from what happened to Prashanth Kishore in Bihar.
All crowd will not translate to vote.
So, Vijay should leave his ego and come forward to join alliance with BJP+ADMK, if at all Vijay wants to make his presence felt in TN Assembly from June 2026.மேலும்
-
பீஹார் என்றால் நிதிஷ்... புலி இன்னும் உயிருடன்தான் உள்ளது: நிதிஷை வாழ்த்தி ஒட்டப்படும் போஸ்டர்கள்
-
பீஹார் தேர்தல் முடிவுகள்: முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ், நயினார் கருத்து
-
2020ல் ஒன்றே ஒன்று; 2025ல் 22 இடம்; கூட்டணியால் உச்சம் பெற்ற சிராக் பஸ்வான்
-
பீஹார் தேர்தல்: தேஜஸ்விக்கு தன் பலத்தை காட்டிய ஒவைசி!
-
பீஹாரில் நிதிஷ் குமார் வெற்றி வாகை சூட காரணமான ஐந்து விஷயங்கள்!
-
பீஹாரில் கிடைத்தது அமோக வெற்றி; பாஜவின் அடுத்த இலக்கு மேற்கு வங்கம்!