பீஹாரில் நிதிஷ் குமார் வாகை சூட காரணமான ஐந்து விஷயங்கள்!
நமது சிறப்பு நிருபர்
பீஹாரில் மீண்டும் நிதிஷ் குமார், பாஜ தலைமையிலான தேஜ கூட்டணி ஆட்சியை பிடிப்பதற்கு 5 விஷயங்கள் முக்கியமாக கருதப்படுகிறது.
பீஹார் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆரம்பம் முதலே தேஜ கூட்டணி முன்னிலையில் உள்ளது. இது பீஹாரில் மீண்டும் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது என்பதை உறுதி செய்துள்ளது. இந்த வெற்றிக்கு 5 விஷயங்கள் முக்கியமாக கருதப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:
அனைத்து வீடுகளுக்கும் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது ஆட்சியைப் பிடிக்க பக்கபலமாக இருந்துள்ளது. அதுமட்டுமின்றி பெண்களை தொழில் முனைவோர் ஆக்குவதற்கு 1.3 கோடி பெண்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.10,000 வரவு வைக்கப்பட்டது. இது வழக்கத்தை விட தேஜ கூட்டணிக்கு பெண்களின் ஓட்டுகளை அதிகரிக்க செய்துள்ளது.
தேர்தலில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக ஓட்டளித்தனர். மொத்த ஓட்டுப்பதிவு 66.91% ஆக இருந்த நிலையில், பெண்களின் ஓட்டுப்பதிவு 71.6% ஆக உயர்ந்தது. இது தேஜ கூட்டணி தற்போது முன்னிலை வகிக்க முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
தேஜஸ்வி யாதவ் வெற்றி பெற்றால் மாதம் ரூ.2500 தருவதாக அளித்த வாக்குறுதியை நம்புவதற்குப் பதிலாக, பெண்கள் நிதிஷ் குமார் மீதான தங்கள் நம்பிக்கையை வலுப்படுத்தினர். 1.2 கோடி மூத்த குடிமக்களுக்கான முதியோர் ஓய்வூதியத்தை நிதிஷ் குமார் ரூ.400 லிருந்து ரூ.1,100 ஆக உயர்த்தியது ஆட்சியை மீண்டும் பிடிப்பதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
மூத்த குடிமக்கள் இதை நிதிஷ் குமாரிடமிருந்து கிடைத்த பெரிய பரிசாகக் கருதினர். இதனால் மீண்டும் நிதிஷ் குமார், பாஜ தலைமையிலான தேஜ கூட்டணி ஆட்சியை அமைக்க இருக்கிறது. பீஹார் மக்கள் அமோக வெற்றியை வழங்கி உள்ளனர்.
வாசகர் கருத்து (25)
Narayanan Ramaswamy - Bangalore,இந்தியா
14 நவ,2025 - 20:18 Report Abuse
ஆக திராவிட மாடல் இலவசங்கள் தான் வெற்றிக்கு காரணம்னு சொல்லுங்க. 0
0
Reply
மனிதன் - riyadh,இந்தியா
14 நவ,2025 - 19:19 Report Abuse
பீஹாரில் நிதிஷ் குமார் வாகை சூட காரணமான ஐந்து விஷயங்கள்.......
1 . தேர்தல் கமிஷன், 2.ஒட்டு திருட்டு, 3. CCTV காட்சிகளை அழித்தது, 4. ஹோட்டல் ரூமில் அமித்ஷாவின் ஆலோசனைக்கூட்டம் என்ற பெயரில் நடந்த தில்லுமுல்லு, 5. எதிர்கட்சிகள் மற்றும் மக்களின் கையாலாகாத்தனம்... 0
0
Reply
R.Balasubramanian - Chennai,இந்தியா
14 நவ,2025 - 16:21 Report Abuse
வெற்றி நிச்சயம் வாஸ்த்துக்கு உரியது. ஆனால் இது எல்லாம் அதிக பண சுமை அரசுக்கு கொடுக்கும் எப்படி சமாளிப்பார்கள்? 0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
14 நவ,2025 - 16:19 Report Abuse
பிஹாரில் படிப்பறிவில்லாதவர்கள் அதிகம் ஆனால் மனிதர்கள் அதிக சதவிகிதம் டாஸ்மாக்கினாட்டில் படிப்பரிவுள்ளவர்கள் அதிகம் ஆனால் மனிதர்கள் குறைவு. இரண்டு காரணம் 1 டாஸ்மாக்கினாடு சரக்கு 2 திருட்டு திராவிட எண்ணங்கள் 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
14 நவ,2025 - 15:15 Report Abuse
தமிழர்களை விட, திராவிடர்களை விட நன்கு சிந்தித்து வாக்களிப்பவர்களா பீகாரிகள் ???? 0
0
GSR - Coimbatore,இந்தியா
14 நவ,2025 - 16:35Report Abuse
கல்யாண மண்டபத்தில் அடைபட்டு எலும்பு துண்டையும் கட்டிங்கையும் சிந்தித்து வாக்களிக்கவில்லை என்பது மட்டும் உறுதி 0
0
Reply
Krishna - Dubai,இந்தியா
14 நவ,2025 - 14:58 Report Abuse
நிதிஷ் போன தேர்தலில் சொன்ன வாக்குரிமையை. நிறைவேற்றினார். மாநில வருவாய்/செலவு தடையில்லாமல் நிறைவேற்றப்பட்டது. முறைகேடுகள். இல்லாமல் இருந்தது 0
0
Reply
Moorthy - ,இந்தியா
14 நவ,2025 - 14:17 Report Abuse
கடந்த ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் கிடைத்ததை விட மிகப்பெரிய வெற்றி என் டி ஏ கூட்டணிக்கு பிஹாரில் கிடைத்துள்ளது நமோ மற்றும் பிஜேபி கு கிடைத்த மிக பெரும் வெற்றி இது 0
0
Reply
Moorthy - ,இந்தியா
14 நவ,2025 - 14:15 Report Abuse
பிஜேபி கு இனி பீகார் குறித்து பயம் இல்லை நிதிஷ் , தேஜஸ்வி மீண்டும் இணைந்தாலும் பெரும்பான்மை கிடைக்காது , ஆகவே நிதிஷுக்கு பிஜேபி தயவு தேவை முதல்வராக நீடிக்க 0
0
Iyer - Karjat,இந்தியா
14 நவ,2025 - 14:51Report Abuse
ஐயா பிஜேபி க்கு இனி எல்லா ராஜ்யத்திலும் வெற்றிதான். 0
0
Reply
Nagarajan D - Coimbatore,இந்தியா
14 நவ,2025 - 14:00 Report Abuse
எப்படியோ இத்தாலிய கோஷ்டி ஒழிந்தால் சரி... அந்த ராகுலும் இதோட முடித்தான் 0
0
Reply
oviya vijay - ,
14 நவ,2025 - 13:57 Report Abuse
தான் செய்த நலத்திட்டங்கள் பற்றி மக்கள் புரிந்து கொள்ளும் ஆட்சி நடத்தி பெற்ற வெற்றி. இங்கே இன்னும் 70 வருஷமா ஆரியன், ஹிந்தி எதிர்ப்பு, சமஸ்கிருதம், நீட் ஒழிப்பு, எல்லாருக்கும் 2 ஏக்கர் நிலம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, கேஸ் 500 க்கு அப்டின்னு burudaa விட்டு அடுத்தவரின் உழைப்பை சுரண்டி எடுத்து ஸ்டிக்கர் ஒட்டும் மாடல்..
.இருநூறுக்கும் இலவசத்தை நம்பி தலைமுறை தலைமுறையாக ஒரு இனத்தையே அழித்து ஒழித்த மக்கள் இருக்கும் வரை இந்த சுரண்டும் கும்பல் அட்டகாசம் தொடரும்... 0
0
Modisha - ,இந்தியா
14 நவ,2025 - 19:07Report Abuse
எவ்ளோ வேணும்னாலும் திட்டிக்கோங்க .எங்களுக்கு உரைக்காது . 0
0
மனிதன் - riyadh,இந்தியா
14 நவ,2025 - 19:23Report Abuse
அங்கன்ன வாழுதாம்.., இங்கிருப்பதாய் அப்படியே காப்பியடித்தது தானே.... மகளிர் உரிமைத்தொகையாக பத்தாயிரம் கொடுப்போம் என்று "ஜி" சொன்னது ஓட்டுக்கு கொடுக்கப்பட்ட பணம்தானே?? 0
0
Reply
மேலும் 11 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement