பீஹார் தேர்தல்: தேஜஸ்விக்கு தன் பலத்தை காட்டிய ஒவைசி!
-நமது நிருபர்-
தங்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள மறுத்த தேஜஸ்விக்கு பாடம் கற்பிக்கும் வகையில், ஒவைசியின் கட்சி பீஹாரில் 2020ல் வென்ற அதே 5 தொகுதிகளில் மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறது.
கடந்த 2020ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி தனித்து போட்டியிட்டது. அக்கட்சி 5 தொகுதிகளில் வென்றது. லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சியின் முஸ்லிம் வாக்கு வங்கியில் ஒவைசி கட்சி சேதத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் ஒவைசி கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் பின்னர் ஆர்ஜேடி கட்சியில் சேர்ந்தனர். இந்த முறை, தேர்தலில் காங்கிரஸ்- ஆர்ஜேடி கூட்டணியில் சேர ஒவைசி விரும்பினார்.
பாஜ கூட்டணியை தோற்கடிக்க நாம் ஒன்று சேர வேண்டும் என்று கூறிய ஒவைசி, கூட்டணிக்கு தயாராக இருப்பதாக தேஜஸ்விக்கு கடிதமும் அனுப்பினார். ஆனால் அதனை துளி கூட தேஜஸ்வி மதிக்கவில்லை.
பொது நிகழ்சியில் பேசும்போது கூட, 'ஆர்ஜேடி தலைமையிலான கூட்டணியில் 6 தொகுதிகள் தந்தால் இணைவேன்' என ஒவைசி கூறியிருந்தார். அதற்கும் பலன் கிடைக்கவில்லை. தனது கட்சியின் முஸ்லிம் ஓட்டு வங்கியை யாராலும் பறிக்க முடியாது என தேஜஸ்வி அதிக நம்பிக்கையுடன் இருந்தார்.
வேறு வழியில்லாத ஒவைசி, தேர்தலில் தனித்து களம் இறங்கினார். இப்போது அவரது கட்சி வேட்பாளர்கள் 2020ல் வெற்றி பெற்ற அதே 5 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளனர். இதன் மூலம் தனது பலம் என்ன என்பதை தேஜஸ்வி யாதவுக்கு ஒவைசி நிரூபித்துள்ளார் என்கின்றனர், பீஹார் அரசியல் பிரமுகர்கள்.
ஒவேஷி இஸ்லாமிய மக்களுக்காக போராடுகிறார். தமிழகத்திலும் இவர் தனியாக நின்று இஸ்லாமிய மக்களின் பலத்தை ஸ்டாலினுக்கு காட்ட வேண்டும். அதுவரை திமுக மற்றும் காங்கிரஸ் இஸ்லாமிய மக்களை ஏமாற்றி வருகின்றன.
உழைக்க பிறந்தவர்கள்
தேசிய நீரோட்டத்தில் இருக்கிறார்கள்
பிஹரை பற்றி பல தவறான கருத்துக்கள் உலாவருகின்றன. சீனாவுடன் நடந்த யுத்தத்தில் இந்திய வீரர்கள் தாக்கப்பட்டபோது ராணுவ தலைமை உடனடியாக பீகார் ரெஜிமென்ட் சார்ந்த ராணுவ வீரர்களை அங்கே அனுப்பியது. 1 மணி நேரத்தில் நிலைமை மாறி 40 சீன வீரர்கள் அங்கேயே கொல்லப்பட்டனர். 50 பேருக்கும் மேலே காயம் அடைந்தனர். சீனா அமைதியாக வெளியில் தெரியாமல் வேனில் அவர்கள் உடலை போட்டு எடுத்து சென்றது.
IAS, IPS அரசாங்க வேலை வெற்றியில் பீஹாரிகள் முதல் இடத்தில் இருக்கிறார்கள். IIT, JEE கடுமையான பொறியியல் தேர்வுகளில் patoali என்ற பீகார் கிராமம் வருட வருடம் 20 பேருக்கும் மேல் வெற்றி பெறுகிறார்கள்.
நம்ம ஆளோட புது ஐ. டி விங் டீமை காணோம்
இரண்டாவது ஜின்னாஹ்வுக்கு இவ்வளவு பாராட்டுக்கள் தேவை இல்லை. இவனது தொகுதி பழைய ஹைதராபாத்தில் ஹிந்து பெண் குழந்தைகள் பட்டப்பகலில் போதை மருந்து கொடுத்து கடத்தப்படுகிறார்கள். அவர்களது தவறான புகைப்படம், வீடியோ மர்ம நபர்களால் எடுக்கப்பட்டு அவர்களது குடும்பங்கள் மிரட்டப்படுகின்றன.
போலீஸ் FIR பதிய மறுக்கிறது. உங்கள் பெண்களை நீங்கள் பாதுகாத்து கொள்ளுங்கள் என்று மிர்ரடப்படுகிறார்கள்.
தமிழகம் மென் மேலும் தலை நிமிரும்.
பீஹாரி வந்தரையும் வாழ வைக்கும்.
தேர்தல் ....கண் துடைப்பு நாடகம் முடிந்தது.
சரி சரி, ஒப்பாரி வைத்து போதும், கண்ணை துடைச்சுக்கோ.
பீகார் வளர்ச்சி தமிழகம் அளவுக்கு இல்லையென்றால் கூட பிகார் மக்கள் தற்போது படிப்பில் அதிக அக்கறை காட்ட துவங்கி உள்ளார்கள். பிகார் மக்கள் தமிழகத்தில் வேலை செய்வது தமிழக மக்கள் வெளி நாட்டு பணிக்கு செல்வதை போல. பிகார் ராஜஸ்தான் போன்ற வட மாநில மக்கள் அமைப்பு சாரா தொழில்கள் மற்றும் சிறிய தொழிற்சாலைகளில் சரியான தங்கும் இட வாய்ப்புக்கள் இல்லாமல் இருந்தாலும் பணி செய்து வாரா வாரம் தங்கள் கூலி பணத்தில் தங்கள் செலவு போக மீதி பணத்தை அப்படியே சனிக்கிழமை அவர்கள் ஊருக்கு அனுப்பி விடுவார்கள். தமிழகத்தில் ஆட்சியில் உள்ளவர்கள் பிகார் மக்களை இழிவு படுத்தி பேசியது தங்கள் அவமானக கருதி எப்படியாவது முன்னேறி விட வேண்டும் என்று நினைப்பவர்கள். தமிழக அமைச்சர்களுக்கு இது ஒரு பாடம். இண்டி கூட்டணி தோல்விக்கு திமுகவின் இந்து மத விரோத மனப்பாங்கு வட இந்திய மக்களை அவமானப் படுத்துதல் போன்ற செயல்களும் ஒரு காரணம்.
சில தொகுதிகளில் இஸ்லாமியர்களின் நம்பிக்கையையும் பாஜக கூட்டணி பெற்றுள்ளது .......
அதாவது ஒவைசியின் கட்சி அங்கே இஸ்லாமிய வாக்குவங்கியைத் தக்க வைத்துள்ளது ....... ஹிந்துக்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இது .....
அடுத்து தமிழ் நாட்டில் மகத்தான ஆட்சி மாற்றம் தேவை . செய்வார்களா தமிழக மக்கள்?
இங்கு மாற்றம் வர எந்த வழியும் இல்லை. சத்தம் போடாமல் தி மு க விற்கே வோட்டு போடப்போகிறார்கள்.