மாமல்லபுரம் அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது
மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உப்பளம் பகுதியில் சிறிய ரக பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. பயிற்சியில் ஈடுபட்டு இருந்த விமானம் தொழற்சாலைக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது, விபத்துக்குள்ளான.
தாம்பரம் விமானப்படை தளத்துக்கு சொந்தமானதாக கருதப்படும் இந்த விமானத்தில் இருந்த 3 பேர் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பியதாக தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
நேற்று( நவ.,13) வானில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக பயிற்சி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானம் புதுக்கோட்டை கீரனுார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்டது. இந்த பரபரப்பு அங்குவதற்குள், இன்று மாமல்லபுரம் அருகே பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
நொறுங்கியது என்பதை விட இந்த விபத்தின் படத்தை பார்த்தால் வெடித்துசிதறியது என்று சொல்லலாம் போல இருக்கின்றதுமேலும்
-
பீஹாரின் இளம் வயது எம்எல்ஏ; மைதிலி தாகூருக்கு குவியும் வாழ்த்து
-
இழுபறிக்கு பிறகு வெற்றி பெற்றார் தேஜஸ்வி
-
குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார்
-
பீஹாரில் முதல்வர் பதவி யாருக்கு? கிளம்பியது எதிர்பார்ப்பு
-
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் குளறுபடி: இபிஎஸ் குற்றச்சாட்டு
-
நல்லாட்சி, சமூக நீதி வென்றுள்ளது; தேர்தல் முடிவால் பிரதமர் மோடி மகிழ்ச்சி