பீஹாரில் முதல்வர் பதவி யாருக்கு? கிளம்பியது எதிர்பார்ப்பு
நமது சிறப்பு நிருபர்
பீஹார் தேர்தல் முடிவில் நிதிஷ் கட்சியை விட பா.ஜ., அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், முதல்வர் பதவியில் மாற்றம் வருமா என்று எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
பீஹார் தேர்தலில் பாஜ, நிதிஷ்குமார் தலைமையிலான தேஜ கூட்டணி, தேர்தலுக்குப் பிந்தைய கணிப்பில் கூறியதை விட, அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து உள்ளது. இந்த தேர்தல் முடிவை தான் இப்போது மொத்த நாடும் உற்று பார்த்துக்கொண்டு இருக்கிறது.
இந்த முறை பாஜ, ஜேடியு உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி, இமாலய வெற்றியை பெறுகிறது. மொத்த முள்ள 243 தொகுதிகளில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் தேஜ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு பக்கம் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை ருசிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில், யார் அடுத்த முதல்வர் என்பது தான் அடுத்து முக்கியமான விஷயமாகும்.
நிதிஷ் குமார் கட்சியை விட பா.ஜ., அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உயர்ந்துள்ளது. இதனால் முதல்வர் பதவியில் மாற்றம் வருமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர், 'நிதிஷ்குமார் தான் அடுத்த முதல்வர்' என அடித்துக்கூறி வருகின்றனர்.
மத்திய அரசுக்கு, நிதிஷ் குமார் கட்சி எம்.பி.,க்களின் ஆதரவு தேவை என்பதால், பீஹார் முதல்வர் பதவியில் மாற்றம் வர வாய்ப்பில்லை என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
எனவே, நிதிஷ் குமார் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமருவதற்கே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பீஹார் அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
வாசகர் கருத்து (10)
KRISHNAN R - chennai,இந்தியா
14 நவ,2025 - 21:57 Report Abuse
தார்மீக அடிப்படையில் நிதீஷ் குமார் தகுதி உள்ளவர் பி ஜே பி உணர வேண்டும் 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
14 நவ,2025 - 20:20 Report Abuse
ஏற்க்கனவே மோடி ஐயா நிடிஷ்தான் முதல்வர் என அறிவித்துவிட்டார். ராஜதீப் சர் தேசாய்த்தான் குட்டையா குழப்ப ஆரம்பித்தவர். 0
0
Reply
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
14 நவ,2025 - 19:48 Report Abuse
தேர்தலுக்கு முன்பே, வெற்றி பெற்ற பின்னர் நிதீஷ் தான் முதல்வர் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட வாக்களிக்க பட்ட ஒன்று... தற்போது பாஜக பெரிய கட்சி ஆனாலும் வாக்குத் தவற வாய்ப்பு இல்லை.நிதீஷ் முதல்வர் ஆவார்.. பாஜக துணை முதல்வர் சீட்டை பெறும் 0
0
SULLAN - chennai,இந்தியா
14 நவ,2025 - 21:21Report Abuse
மாமா பிசுக்கோத்து?? 0
0
Reply
Raman - Chennai,இந்தியா
14 நவ,2025 - 19:34 Report Abuse
No such discussion. Its Nitish and BJP is always magnanimous... 0
0
Reply
A viswanathan - ,
14 நவ,2025 - 19:31 Report Abuse
நிதிஷ் குமாருக்கு தான் முதல்வர்பதவி கொடுக்க வேண்டும்.இதில்
எந்த ஒருமாற்றமும் கூடாது.அப்போது தான் பிஜேபியின் மேல் மக்களுக்கு நம்பகத்தன்மை வரும். 0
0
Vasan - ,இந்தியா
14 நவ,2025 - 21:25Report Abuse
Yes, well said Sir.
BJP should not indulge in back stabbing.
Moreover it is unlikely because they need Nitishs support at Parliament. 0
0
Reply
Santhakumar Srinivasalu - ,
14 நவ,2025 - 18:51 Report Abuse
பிஜேபி யில் நல்ல ஆள் இல்லையா? 0
0
Vasan - ,இந்தியா
14 நவ,2025 - 21:22Report Abuse
அண்ணாமலை இருக்கிறார், ஆனால் அவர் இங்கே தமிழ்நாட்டில் இருக்கிறார். 0
0
Thravisham - Bangalorw,இந்தியா
14 நவ,2025 - 21:50Report Abuse
பிஜேபி யில் நல்ல ஆட்கள் நிறைய பேர் உள்ளனர்? அதற்கு மேல் நம்பகத்தன்மை மிக அதிகமுள்ளது 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement