தோல்விக்கு விருது இருந்தால் ராகுலுக்கு கொடுக்கலாம்: பாஜ கிண்டல்
புதுடில்லி: ''தேர்தலில் தோற்பதற்கு விருது இருந்தால், அனைத்தையும் காங்கிரஸ் எம்பி ராகுலே பெறுவார்,'' என பாஜ கூறியுள்ளது.
பீஹாரில் ஓட்டுத் திருட்டு நடக்கிறது. அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும் எனக்கூறி காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்தித்தன. ஆனால், இது எதுவும் எடுபடவில்லை. தேஜ கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது.
இது தொடர்பாக பாஜ செய்தித் தொடர்பாளர் அமித் மாளவியா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ராகுலுக்கு இன்னொரு தேர்தல். இன்னொரு தோல்வி. தேர்தலில் தோற்பதற்கு விருது இருந்தால், அனைத்தையும் அவரே பெறுவார். பின்னடைவுகள் கூட அவர் அவற்றை எவ்வாறு இவ்வளவு நம்பகத்தன்மையுடன் காண்கிறார் என்று யோசிக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.
இத்துடன் ராகுலுக்கு 95வது தோல்வி என்ற தலைப்பில் படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பலர் 0 முதல் 5 மணி வரையிலான குற்றச்சாட்டு சொல்லும் விளையாட்டு அரசியல்வாதி என்பார்கள். தற்போதுராகுல், இரண்டு தசாப்தங்களில் 95 தேர்தல் தோல்விகளை சந்தித்துள்ளார். சதம் அடிக்க இன்னும் 5 தேவைப்படுகிறது. இந்திய நிறுவனங்கள் மீதான தாக்குதலை திசைதிருப்பும் அரசியல்வாரிசின் தந்திரமா இவ்வாறு அவர் கூறியுள்ளார்.