ஜப்பான் பாட்மின்டன்: அரையிறுதியில் லக்சயா

குமாமோட்டோ: ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் அரையிறுதிக்கு இந்திய வீரர் லக்சயா சென் முன்னேறினார்.

ஜப்பானில், 'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் லக்சயா சென், சிங்கப்பூரின் லோ கீன் யூ மோதினர். மொத்தம் 40 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய லக்சயா சென் 21-13, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இது, லோ கீன் யூவுக்கு எதிராக லக்சயா பெற்ற 7வது வெற்றியானது. இதுவரை 10 முறை மோதினர். லக்சயா 7, லோ கீன் யூ 3ல் வென்றனர்.
அரையிறுதியில் லக்சயா சென், ஜப்பானின் கென்டா நிஷிமோட்டாவை எதிர்கொள்கிறார்.

Advertisement