ஸ்குவாஷ்: ராதிகா 'சாம்பியன்'

சிட்னி: போன்டி ஓபன் சாலஞ்சர் ஸ்குவாஷ் தொடரில் இந்திய வீராங்கனை ராதிகா சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னியில், போன்டி ஓபன் சாலஞ்சர் ஸ்குவாஷ் தொடர் நடந்தது. பெண்களுக்கான பைனலில் இந்தியாவின் ராதிகா சீலன் 24, நியூசிலாந்தின் மெய்டன்-லீ கோ மோதினர். அபாரமாக ஆடிய தமிழகத்தின் ராதிகா 3-0 (11-7, 11-6, 11-7) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
பி.எஸ்.ஏ., சாலஞ்சர் அரங்கில் 4வது முறையாக பைனலில் விளையாடிய ராதிகா, 2வது முறையாக கோப்பை வென்றார். இதற்கு முன், கடந்த ஆண்டு இந்துாரில் நடந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த ஷெப்பர்டன், நியூ சவுத் வேல்ஸ் ஓபனில் பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்திருந்தார்.

Advertisement