வங்கதேசம் இன்னிங்ஸ் வெற்றி
சைல்ஹெட்: முதல் டெஸ்டில் அசத்திய வங்கதேச அணி, இன்னிங்ஸ், 47 ரன் வித்தியாசத்தில் வென்றது. தொடரில், 1-0 என முன்னிலை பெற்றது.
வங்கதேசம் சென்றுள்ள அயர்லாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சைல்ஹெட் நகரில் நடந்தது. முதல் இன்னிங்சில் அயர்லாந்து 286, வங்கதேசம் 587/8 ('டிக்ளேர்') ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் அயர்லாந்து அணி 2வது இன்னிங்சில் 86/5 ரன் எடுத்திருந்தது.
நான்காம் நாள் ஆட்டத்தில் மேத்யூ ஹம்ப்ரிஸ் (16) நிலைக்கவில்லை. நிதானமாக ஆடிய ஆன்டி மெக்பிர்னி (52) அரைசதம் கடந்தார். கேப்டன் ஆன்டி பால்பிர்னி (38), ஜோர்டான் நீல் (36), பாரி மெக்கார்த்தி (25) ஆறுதல் தந்தனர். அயர்லாந்து அணி 2வது இன்னிங்சில் 254 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. வங்கதேசம் சார்பில் ஹசன் முராத் 4 கைப்பற்றினார். வங்கதேசத்தின் ஹசன் ஜாய் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
மேலும்
-
வெளிமாநில ஆம்னி பஸ்கள் நிறுத்தம் ரூ.20 கோடி இழப்பு
-
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
-
சேலத்தில் மகளிர் பளு துாக்கும் போட்டி நாமக்கல் டிரினிடி கலை கல்லுாரி சாம்பியன்
-
விவசாயிகளின் தோழனாக விளங்கும் 'டபே' டிராக்டர்
-
மாணவர்களுக்கான அறிவியல் கல்வி சுற்றுலா
-
மரக்கிளைகள் வெட்டி சாய்த்த நுாற்பாலை கிரேன் சிறைபிடிப்பு