ஈஷா சிங் 'வெண்கலம்': உலக துப்பாக்கி சுடுதலில்
கெய்ரோ: உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஈஷா சிங் (25 மீ., 'பிஸ்டல்') வெண்கலம் வென்றார்.
எகிப்தில், உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான தனிநபர் 25 மீ., 'பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஈஷா சிங் (587.21 புள்ளி), மனு பாகர் (587.21) முறையே 5, 6வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர். மற்றொரு இந்திய வீராங்கனை ராஹி சர்னோபட் (572.17) 54வது இடம் பிடித்து ஏமாற்றினார்.
அடுத்து நடந்த பைனலில் ஈஷா சிங் 30 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். மனு பாகர் (23) 5வது இடம் பிடித்து ஏமாற்றினார்.
இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என, 12 பதக்கங்களுடன் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. முதலிரண்டு இடங்களில் சீனா (10 தங்கம், 6 வெள்ளி, 2 வெண்கலம்), தென் கொரியா (6 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம்) உள்ளன.
மேலும்
-
முதல்வர் படைப்பகம் ஸ்டாலின் திறப்பு
-
சிறையில் இருந்து வந்தவுடன் கைவரிசை 'சிசிடிவி'யில் சிக்கிய 'பலே' பைக் திருடன்
-
புதியதாக 270 மின்சார பேருந்துகள் ஜனவரிக்குள் பயன்பாட்டிற்கு வரும்
-
மெட்ரோ ரயிலில் எடுத்து வரப்பட்ட நுரையீரல்
-
வடபழனி முருகன் கோவிலில் ஓதுவார் பயிற்சி பள்ளி துவக்கம்
-
தலை இல்லா முண்டமாக காவல் துறை: அ.தி.மு.க., 'மாஜி' காட்டம்