உலக செஸ்: அர்ஜுன் 'டிரா'
கோவா: உலக கோப்பை செஸ் 5வது சுற்று போட்டியை இந்தியாவின் அர்ஜுன், ஹரிகிருஷ்ணா 'டிரா' செய்தனர்.
கோவாவில், உலக கோப்பை செஸ் 11வது சீசன் நடக்கிறது. 'நடப்பு உலக சாம்பியன்' குகேஷ், பிரக்ஞானந்தா உள்ளிட்ட இந்திய வீரர்கள் வெளியேறினர். இந்தியா சார்பில் அர்ஜுன் எரிகைசி, ஹரிகிருஷ்ணா மட்டும் 5வது சுற்றுக்கு முன்னேறினர்.
ஐந்தாவது சுற்றுக்கான முதல் போட்டியில் அர்ஜுன், அமெரிக்காவின் லெவான் ஆரோனியன் மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், 41வது நகர்த்தலில் 'டிரா' செய்தார்.
மற்றொரு போட்டியில் ஹரிகிருஷ்ணா, மெக்சிகோவின் ஜோஸ் மார்டினெஸ் அல்காண்டாரா மோதினர். இதில் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய ஹரிகிருஷ்ணா, 41வது நகர்த்தலில் 'டிரா' செய்தார்.
ஐந்தாவது சுற்றுக்கான 2வது போட்டியில் வெற்றி பெறும் வீரர், அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம். ஒருவேளை போட்டி மீண்டும் 'டிரா' ஆனால், 'டை பிரேக்கர்' சுற்று நடத்தப்படும்.
மேலும்
-
முதல்வர் படைப்பகம் ஸ்டாலின் திறப்பு
-
சிறையில் இருந்து வந்தவுடன் கைவரிசை 'சிசிடிவி'யில் சிக்கிய 'பலே' பைக் திருடன்
-
புதியதாக 270 மின்சார பேருந்துகள் ஜனவரிக்குள் பயன்பாட்டிற்கு வரும்
-
மெட்ரோ ரயிலில் எடுத்து வரப்பட்ட நுரையீரல்
-
வடபழனி முருகன் கோவிலில் ஓதுவார் பயிற்சி பள்ளி துவக்கம்
-
தலை இல்லா முண்டமாக காவல் துறை: அ.தி.மு.க., 'மாஜி' காட்டம்