மெட்ரோ ரயிலில் எடுத்து வரப்பட்ட நுரையீரல்
சென்னை: வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு நோயாளிக்கு, நுரையீரல் மாற்று சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.
அதனால், திருச்சியில் இருந்து தானமாக பெறப்பட்ட நுரையீரலை, வடபழனிக்கு எடுத்து வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்து விமானத்தில் சென்னை விமான நிலையத்திற்கு பாதுகாப்பாக நுரையீரல் எடுத்து வரப்பட்டது.
மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து வடபழனிக்கு, சாலை மார்க்கமாக சென்றால் போக்குவரத்து நெரிசலில் சிக்க வேண்டியிருக்கும். எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும் என்பதால், மெட்ரோ ரயிலில் எடுத்துச் செல்ல முடிவானது.
அதன்படி, மெட்ரோவில் பயணித்து 17:37 நிமிடங்களில் வடபழனிக்கு டாக்டர்கள் குழுவினர் பத்திரமாக எடுத்துச் சென்றனர்.
அங்கிருந்து அவசரகால ஆம்புலன்ஸ் வாகனம் வாயிலாக காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அங்கு, நோயாளிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதேபோல், மாற்று அறுவை சிகிச்சைக்காக தானமாக பெறப்பட்ட நுரையீரல், மெட்ரோ ரயில் வாயிலாக ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சமீபத்தில் எடுத்து செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் 5.62 கோடி பேருக்கு வினியோகம்
-
புராணகிலாவிற்கு விஜயம் செய்த ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி
-
வெளிமாநில ஆம்னி பஸ்கள் நிறுத்தம் ரூ.20 கோடி இழப்பு
-
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
-
சேலத்தில் மகளிர் பளு துாக்கும் போட்டி நாமக்கல் டிரினிடி கலை கல்லுாரி சாம்பியன்
-
விவசாயிகளின் தோழனாக விளங்கும் 'டபே' டிராக்டர்