முதல்வர் படைப்பகம் ஸ்டாலின் திறப்பு
சென்னை: கொளத்துார் தொகுதியில், அரசு தேர்வுக்கு பயிலும் மாணவர்கள் பயனடைய கட்டப்பட்ட முதல்வர் படைப்பகத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
கொளத்துார் தொகுதிகளில், சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சி.எம்.டி.ஏ., சார்பாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின், நேற்று திறந்து வைத்தார்.
பெரியமேடில் சார் - பதிவாளர் அலுவலகத்திற்கான புதிய கட்டடம்; பெரியார் நகரில் 5.24 ரூபாய் கோடியில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நகர் நுாலகம் மற்றும் முதல்வர் படைப்பகத்தை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
பெரவள்ளூரில் புறகாவல் நிலையம் கட்ட, அவர் அடிக்கல் நாட்டினார். கொளத்துாரில் காவல் துறை துணை கமிஷனர் அலுவலகம் கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.
தவிர, கொளத்துார் ஜெகந்நாதன் தெருவில் 17.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ரத்த சுத்திகரிப்பு மற்றும் மறுவாழ்வு மைய கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் 5.62 கோடி பேருக்கு வினியோகம்
-
புராணகிலாவிற்கு விஜயம் செய்த ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி
-
வெளிமாநில ஆம்னி பஸ்கள் நிறுத்தம் ரூ.20 கோடி இழப்பு
-
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
-
சேலத்தில் மகளிர் பளு துாக்கும் போட்டி நாமக்கல் டிரினிடி கலை கல்லுாரி சாம்பியன்
-
விவசாயிகளின் தோழனாக விளங்கும் 'டபே' டிராக்டர்