மரக்கிளைகள் வெட்டி சாய்த்த நுாற்பாலை கிரேன் சிறைபிடிப்பு
பள்ளிப்பாளையம்: வெப்படையில், அரசு பள்ளி வளாகத்தின் வெளியே இருந்த மரங்களின் கிளைகளை, தனியார் நுாற்பாலை தொழிலாளர்கள் வெட்டியதால், கிரேனை பொது மக்கள் சிறை பிடித்தனர்.
பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அரசு உயர்நிலைப்-பள்ளி வளாகத்தில் மரங்கள் உள்ளன. அதே போல வளாகத்தின் வெளியேயும் மரங்கள் உள்ளன. பள்ளி வளாகத்தில் வெளியே உள்ள மரங்களின் கிளைகள், மின் ஒயரில் உரசும் போது, அப்பகு-தியில் உள்ள தனியார் நுாற்பாலைக்கு செல்லும் மின்சாரம் தடை ஏற்படுவதாக தெரிகிறது.இந்நிலையில், நேற்று மாலை தனியார் நுாற்பாலை தொழிலா-ளர்கள் கிரேன் மூலம், பள்ளி வளாத்தின் வெளியே உள்ள மரங்-களின் கிளைகளை வெட்டி சாய்த்துள்ளனர். இதை பார்த்த அப்ப-குதி மக்கள், இது குறித்து கேட்டுள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கிரேனை சூழ்ந்து கொண்ட மக்கள், மரக்கிளைகளை வெட்டுவதை தடுத்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய அதிகாரிகள், அனுமதியின்றி மரக்கி-ளைகளை வெட்டுவதை கண்டித்தனர். பின்னர் நுாற்பாலை தொழிலாளர்கள் சென்று விட்டனர்.
மேலும்
-
எஸ்.ஐ.ஆர்., படிவத்தை பார்த்தால் தலை சுற்றுகிறது: ஸ்டாலின் புலம்பல்
-
வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் 5.62 கோடி பேருக்கு வினியோகம்
-
புராணகிலாவிற்கு விஜயம் செய்த ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி
-
வெளிமாநில ஆம்னி பஸ்கள் நிறுத்தம் ரூ.20 கோடி இழப்பு
-
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
-
சேலத்தில் மகளிர் பளு துாக்கும் போட்டி நாமக்கல் டிரினிடி கலை கல்லுாரி சாம்பியன்