சேலத்தில் மகளிர் பளு துாக்கும் போட்டி நாமக்கல் டிரினிடி கலை கல்லுாரி சாம்பியன்

நாமக்கல்:தமிழ்நாடு மாநில பளு துாக்கும் சங்கமானது, சேலம் மாவட்ட பளு துாக்கும் சங்கத்தின் பங்களிப்புடன், இளையோர் மற்றும் மூத்தோர் (ஆடவர் மற்றும் மகளிர்) பளு துாக்கும் போட்டியை சேலத்தில் நடத்தியது.


பல்வேறு பகுதிகளை சேர்ந்த கல்லுாரி மாணவ, மாணவியர் போட்டியில் பங்கேற்றனர். இதில், நாமக்கல்- டிரினிடி மகளிர் கலை அறிவியல் கல்லுாரி மாணவியர் பங்கேற்று, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்தனர். இக்கல்லுாரி மாணவியர் பிரீத்தி, 69 கிலோ எடை பிரிவிலும், ரசிகா, 63 கிலோ எடை பிரிவிலும், தீபஸ்ரீ, 77 கிலோ எடை பிரிவிலும், பவதா-ரிணி, 48 கிலோ எடை பிரிவிலும் முதலிடம் பெற்றனர். அதன் மூலம் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்-தனர்.வெற்றி பெற்ற மாணவியரை, கல்லுாரி தலைவரும், நாமக்கல் ஆஞ்சநேயர் மற்றும் லட்சுமி நரசிம்மர் கோவில் அறங்காவலர் குழுத்தலைவருமான நல்லுசாமி பாராட்டினார். கல்லுாரி முதல்வர் லட்சுமிநாராயணன், உடற்கல்வி இயக்குனர் அர்ச்சனா உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement