குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

வெண்ணந்துார்: ராசிபுரம் ஆட்டையாம்பட்டி சாலையில், வெண்ணந்துார் அடுத்த மேட்டு மிஷின் அருகே, குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் சாலையில் பெருக்கெ-டுத்து வீணாகிறது.


சாலையில் ஓடும் குடிநீரால், வாகனங்களில் செல்வோர் தவறி விழுந்து காயமடைகின்றனர். தினமும் குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறுவதால், தார்ச்சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து சிதி-லமடையும் வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறு-கையில், 'குடிநீர் வாரிய குழாய் உடைந்து சில நாட்களான நிலையில், பழுது சரி செய்யப்படவில்லை. இதனால் தினமும் குடிநீர் வீணாகிறது. எனவே, குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்து, குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement