வார தொடக்கத்தில் தங்கம் விலை குறைவு; ஒரு சவரன் ரூ.92,320க்கு விற்பனை
சென்னை: சென்னையில் வார தொடக்க நாளான இன்று (நவ 17) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.92,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.11,540க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. கடந்த சனிக்கிழமை (நவ.,15) தங்கம் விலை கிராமுக்கு, 190 ரூபாய் குறைந்து, 11,550 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,520 ரூபாய் சரிவடைந்து, 92,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் குறைந்து, 175 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.
இந்நிலையில் இன்று (நவ 17) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.92,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.11,540க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து, ஒரு கிராம் ரூ.173க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும்
-
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என அறிவிப்பு
-
டிஜிட்டல் கைது மூலம் ரூ.33 கோடி மோசடி: பெங்களூரு பெண்ணுக்கு ஏமாற்றம்
-
இன்று தொடங்கும் துபாய் விமான கண்காட்சி; இந்திய விமானப்படை பங்கேற்பு
-
பிளின்த் பீம், கிரேடு பீம், கிரவுண்ட் பீம்; வேறுபாடு என்ன? கட்டுமான செலவை குறைக்க பொறியாளர்கள் ஆலோசனை
-
சவுதி அரேபியாவில் பஸ்சில் தீ: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு
-
வங்கதேசத்தை விட்டு வெளியேறியது வேதனை; ஷேக் ஹசீனா உருக்கம்