தென்காசி, நெல்லையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
திருநெல்வேலி: கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( நவ.,24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு காரணமாக நாளை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை
திருநெல்வேலி
தென்காசி
ஆகிய மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு ஒத்திவைப்பு
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நாளை நடக்கவிருந்த பருவ தேர்வுகள் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பேரிடர் குழு தயார்
நெல்லை மாவட்டத்தில் 26 பேர் கொண்ட மாநில பேரிடர் குழுவும், 28 பேர் கொண்ட மத்திய பேரிடர் குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
உதவிக்கு
நெல்லையில் மழை பாதிப்பு தொடர்பான உதவிகளை பெற இலவச எண்கள் அறிவிப்பு:
0462-2501070
9786566111
1077
மேலும்
-
இந்தியாவிடம் வீழ்ந்தது தென் கொரியா: அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கியில்
-
கோப்பை வென்றது வங்கதேசம்: அயர்லாந்து மீண்டும் தோல்வி
-
தங்கம் வென்றார் அபினவ் தேஷ்வால்: 'டெப்லிம்பிக்ஸ்' துப்பாக்கி சுடுதலில்
-
பைனலுக்கு முன்னேறியது இந்தியா: கபடி உலக கோப்பையில்
-
தகவல் சுரங்கம் : இரட்டையர் தினம்
-
பிரிட்டனை விட்டு வெளியேறுகிறார் தொழிலதிபர் லட்சுமி மிட்டல்: அதிக வரிவிதிப்பு திட்டத்தால் முடிவு