துபாய் தொழிலதிபர் வெட்டி கொலை

துாத்துக்குடி: துபாயில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வரும் தொழிலதிபர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

துாத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, ஆலடியூரை சேர்ந்த தங்கராஜ், 78, துபாயில் நெல்லை சரவணா ஸ்டோர் என்ற பெயரில் பல்பொருள் அங்காடி நடத்தி வந்தார். சொந்த ஊரில் வீடுகள் கட்டி வாடகைக்கு விடுவது சம்பந்தமாக சில நாட்களுக்கு முன் வந்துள்ளார்.

ஆலடியூர் மெயின் ரோட்டில் நேற்று இரவு தங்கராஜ் நின்று கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் இருவர் திடீரென அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர்.

ரத்த வெள்ளத்தில் மிதந்த தங்கராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஏரல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement