போலி தங்க காசு கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே போலி தங்க காசுகளை கொடுத்து ரூ. 5 லட்சம் மோசடி செய்த தம்பதி உட்பட 4 பேரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லுாரைச் சேர்ந்தவர் ராமர். இவர் நவம்பரில் ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லுாரில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது அங்குள்ள சிலர் தங்களிடம் தங்க காசுகள் உள்ளதாகவும் குறைந்த விலைக்கு தருவதாகவும் கூறினர். ஒரு தங்க காசை வாங்கி ராமர் சோதனையிட்டதில் உண்மையான தங்கம் என தெரிந்தது. இதனால் குறைந்த விலைக்கு ஆசைப்பட்டு ரூ. 5 லட்சம் முன்பணம் கொடுத்து சில தங்க காசுகளை ராமர் வாங்கி சென்றார். பின்னர் அவற்றை பரிசோதித்த பின் போலி என தெரிந்தது.

ராமர் அளித்த புகாரின்பேரில் இதில் தொடர்புடைய காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கத்தைச் சேர்ந்த சக்திவேலு 67, விழுப்புரம் மாவட்டம் திருக்கையைச் சேர்ந்த பாண்டுரங்கன் 60, அவரது மனைவி அரசாயி 56, சண்முகம் 61, ஆகியோரை ராஜபாளையம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து போலி தங்க காசுகள் மற்றும் ரூ. 2 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement