தேசிய கால்நடை கணக்கெடுப்பு விவரம் அடுத்தாண்டு மார்ச் வெளியிட திட்டம்
விருதுநகர்: 21வது தேசிய கால்நடை கணக்கெடுப்பு பணிகள் மே இறுதியில் முழுமையாக நிறைவடைந்தது. இக்கணக்கெடுப்பு விவரங்கள் அனைத்தும் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேசிய கால்நடை கணக்கெடுப்பு பணி நடக்கிறது. 2019ல் 20வது கால்நடை கணக்கெடுப்பு பணி நடந்தது. அதன் பின் 2024ல் செப்.,ல் 21வது கால்நடை கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டு, அக்டோபரில் துவங்கியது.
இக்கணக்கெடுப்பை அலைபேசி வழியாக எடுக்க தனி செயலி உருவாக்கப்பட்டு கால்நடை டாக்டர்கள், கணக்கெடுப்பாளர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு பணி துவங்கப்பட்டது. ஆனால் வடமாநிலங்களில் டாக்டர்கள், கணக்கெடுப்பாளர்களின் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால் திட்டமிட்டப்படி நடப்பாண்டு பிப்ரவரியில் முடிக்க முடியாமல் கூடுதலாக ஒரு மாதம் நடந்தது.
மே இறுதியில் அனைத்து ஆன்லைன் பணிகளும் முடிக்கப்பட்ட மாநிலங்களிடம் இருந்து தகவல்கள் மத்திய அரசிடம் வழங்கப்பட்டது. கணக்கெடுப்பு பணி முடிந்து 6 மாதங்களை கடந்தும் இதுவரை விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் கணக்கெடுப்பு விவரங்களை மத்திய அரசு வெளியிட திட்டமிட்டுள்ளது. வட கிழக்கு மாநிலங்களில் இருந்து வழங்கப்பட்ட கணக்கெடுப்பு தகவல்களுக்கும், முந்தைய கணக்கெடுப்பு தகவல்களுக்கும் இடையே வேறுபாடு இருப்பதால் அவற்றை சரிபார்க்கும் பணிகளால் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
மேலும்
-
ஜனநாயக அரசியல் மாண்பு: புதுச்சேரி அரசுக்கு நன்றி தெரிவித்த விஜய்
-
செல்ல நாய்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
-
ஹிந்து பெண், குழந்தை கடத்தல்: பாகிஸ்தானில் மர்ம நபர்கள் அட்டூழியம்
-
தலைமைச்செயலர், ஏடிஜிபி டிச., 17ல் ஆஜராக வேண்டும்: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஐகோர்ட் கிளை உத்தரவு
-
டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு: மத்திய அரசு முடிவு
-
மேற்கு வங்கத்தில் அராஜகத்தை அனுமதிக்க முடியாது: எஸ்ஐஆர் குறித்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து