ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

3

சென்னை: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஏழு பேருக்கு, தலைமைச் செயலர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.


சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் சித்திக்; பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை கமிஷனர் ஜெயா; மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் செந்தில்குமார்; தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் தலைவர் சந்தியா வேணுகோபால் ஷர்மா; நிதித்துறை செயலர் உதயசந்திரன்; மத்திய அரசு பணியில் உள்ள ஹிதேஷ் குமார் மக்வானா; பள்ளிக் கல்வித்துறை செயலர் சந்திரமோகன் ஆகியோருக்கு, வரும் ஜன., 1 முதல், தலைமைச் செயலர் அந்தஸ்து பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.


மேலும், தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், பேரிடர் மேலாண்மை கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யன், மனிதவள மேலாண்மைத் துறை செயலர் சமயமூர்த்தி, முதல்வரின் செயலர் நிலை -2 ஆக உள்ள செயலாளர் எம்.எஸ். சண்முகம், பொதுத்துறை செயலர் ரீட்டா ஹரீஸ் தாக்கர், சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோர் முதன்மை செயலர் அந்தஸ்துக்கு தகுதி உயர்த்தப்பட்டுள்ளனர்.

Advertisement