கடனை வைத்து மதிப்பீடு செய்வது பிழை; கூட்டணிக்கு முட்டுக்கொடுக்கிறார் ப.சிதம்பரம்
சென்னை: ''மொத்தக் கடனை வைத்து ஒரு மாநிலத்தின் பொருளாதார நிலையை மதிப்பிடுவது என்பது பிழையானது,'' என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். ஒரு மாநிலத்தின் மொத்தக் கடனை வைத்து அந்த மாநிலத்தின் பொருளாதார நிலையை மதிப்பிடுவது என்பது பிழையானது. அமெரிக்காவில் தொடங்கி இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், கனடா வரை எல்லா வளர்ந்த நாடுகளின் மொத்தக் கடன் ஆண்டு தோறும் கூடுகிறது
இந்தியாவின் மொத்தக் கடனும் எல்லா மாநிலங்களின் மொத்தக் கடன்களும் ஆண்டுதோறும் கூடுகின்றன. இது இயல்பு. மொத்தக் கடன் என்பது சரியான அளவை அல்ல. மொத்த உற்பத்தியில் மொத்தக் கடன் எத்தனை சதவீதம் என்பதே பொருத்தமான அளவை. தமிழகத்தில் இந்த அளவை 2021-22ம் ஆண்டு முதல் 2025-26ம் ஆண்டு வரை ஸ்திரமாக (ஒரே நிலையில்) இருந்து வருகிறது.
நிதிப் பற்றாக்குறை ஒவ்வொரு ஆண்டும் குறைக்கப்பட்டு 2025-26ம் ஆண்டில் நிதி ஆயோக் விதித்த வரம்பான 3% என்ற நிலையைத் தமிழகம் எட்டும் என்று இந்த ஆண்டின் மதிப்பீடு சுட்டிக் காட்டுகிறது. இது பாராட்டக்கூடியது.
நிதி மேலாண்மை மேலும் செம்மைப்படுத்த வேண்டும் என்பது ஏற்புடையது. ஆனால் தமிழகத்தின் பொருளாதாரத்தை உத்தரப் பிரதேசத்தின் பொருளாதாரத்துடன் ஒப்பிடுவது என்பது பிழை. இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
பிரவீன் சக்கரவர்த்தி விமர்சனம்
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வுப்பிரிவு தேசிய தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, தமிழகத்தின் கடன், உ.பி., மாநிலத்தின் கடனை காட்டிலும் அதிகமாக இருப்பதாகக்கூறி விமர்சனம் செய்திருந்தார். அதற்கு திமுக தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கூட்டணி கட்சியை திருப்திப்படுத்தும் நோக்கில், சிதம்பரம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒரு மாநிலத்தின் மொத்தக் கடனை வைத்து அந்த மாநிலத்தின் பொருளாதார நிலையை மதிப்பிடுவது என்பது பிழையானது என்றும் முன்னாள் நிதி அமைச்சர் அவர்களே, திருப்பி செலுத்த முடியாத அளவுக்கு கடன் வாங்குவது வீக்கத்தைக் தான் காட்டுமே அல்லாமல் வளர்ச்சியை காட்டாது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா அல்லது மறுக்கிறீர்களா?
ஏன் அரசியல்வாதிகளக்கு மட்டும் ஓய்வில்லை. கொள்ளு பேரன்கள் மற்றும் கொள்ளு பேத்திகளுடன் தன் அரண்மனையில் வெள்ளை பணியாரம் ஊட்டி விளையாடுவதை விட்டு விட்டு வந்துட்டார்
பின்னர் எதனை வைத்து மதிப்பீடு செய்வது பெருந்தகையே? அராஜகத்திலா, லஞ்சத்திலா, கொள்ளையிலா, ஊழலிலா, சட்டம் ஒழுங்கின்மையிலா, இந்துக்களையும், கோயில்களையும் அவமதித்து ஒரு சமூகத்தை மட்டும் ஓட்டிற்காக தூக்கி கொண்டாடுவதிலா, நிர்வாக சீர்கேட்டிலா, தேவையில்லா இலவசங்களிலா......?
கஞ்சா புழக்கத்தை வைத்து மதிப்பீடு செய்யலாமா mr Harvard ?
வேலிக்கு ஓணான் சாட்சி!
ப.சிதம்பரம் கூட்டணிக்கு முட்டுக்கொடுப்பது இருக்கட்டும், நீ ஒன்றியத்துக்கு அதன் கடனுக்கு முட்டுக்கொடுப்பது என்ன வகை தினமனமே ....
அறிவற்ற சொங்கி . உனக்கு சொன்னா புரியுமா??
இதுவே அந்த கேஸ் தான்.
மாநில அரசு கடன்கள் தான், மக்களை வதைக்க சொத்து வரி, வீடு வரி, கழிவு நீர் வரி, குடி தண்ணீர் வரி, சாலை வரி, மாநில GST, சொத்து பதிவு கட்டண வரி, வியாபாரம் செய்ய வரி, லைசென்ஸ் பீஸ், மோட்டார் போக்குவரத்துக்கு வரி, தொழில் வரி, Professional சம்பள வரி, பெட்ரோல், டீசல் வரி என்ற பல வகைகளில் வருகிறது.
உதாரணமாக, ஒவ்வரு 100 ரூபாய் மாநில அரசு கடனுக்கும், 10 -12 ரூபாய் வட்டியும் அதை கண்காணிக்க 3 ரூபாயும் செலவாகிறது. ஆனால் மாநில அரசுகள், மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் 15 ரூபாய் கடன் சம்பந்தப்பட்ட செலவுக்கு, 30 ரூபாய் வரிகளை ஏற்றுகிறது.
இதனால் வரிகள் அதிகரிக்கும் ஒவ்வரு 30 ரூபாய்க்கும், 15% அரசு ஊழியர் லஞ்சத்தில் கொண்டு போய் முடிகிறது. இதனால் பொது மக்களை கிட்டத்தட்ட ஒவ்வரு 100 ரூபாய் கடனுக்கும் 35 ரூபாய் இழப்பு என்பது தான் பொருளாதாரம் தெரிந்த நாம் புரிந்து கொள்ள வேண்டியது.
ஆக மொத்தத்தில் இந்த ஊபிஸ் கூட்டம் பாசி படிஞ்சி கெடக்கு. தமிழ் நாட்டின் பொருளாதாரம் நக்கி நக்கி நக்கி போவுது
அடிமையிலும் அடிமை, கொத்தடிமை...