அதிமுக சார்பில் போட்டியிட 10,175 பேர் விருப்ப மனு

2

சென்னை: தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில், இபிஎஸ்க்காக மட்டும் 2,187 விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன என அதிமுக தெரிவித்துள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்தாண்டு நடக்க உள்ளது. வழக்கமாக ஜனவரி மாதத்துக்குப் பிறகுதான், அரசியல் கட்சிகள் தேர்தலை நோக்கி வேகமெடுத்து செயல்படும். டிசம்பர் மாதத்தின் மத்தியிலேயே, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை நோக்கி விறுவிறுப்பு காட்டி வருகின்றன.


அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகம் டிச.,15 ம் தேதி துவங்கியது. டிச., 23ல் முடிந்த நிலையில், பிறகு டிச., 28 முதல் டிச.,31 வரை நீட்டிக்கப்பட்டது.


இந்நிலையில், அதிமுக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அதிமுக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில், இபிஎஸ் தங்களது தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து 2,187 பேர் விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர். தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் போட்டியிட 7,988 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement