தமிழகம் வருகிறார் அமலாக்கத்துறை இயக்குநர்

1

சென்னை: அமலாக்கத்துறையின் தலைமை இயக்குநர் ராகுல் நவீன் இன்று சென்னை வர உள்ளார்.

டில்லியில் இருந்து 3 நாள் பயணமாக வரும் ராகுல் நவீன், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய்கிறார். மேலும், தற்போது நீதிமன்றங்களில் தமிழகம் தொடர்பான வழக்குகளின் நிலை குறித்தும் அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

சட்டசபை தேர்தல் நெருங்கும்நிலையில், அமலாக்கத்துறை இயக்குநரின் தமிழக வருகை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement