தீமைகளை நினைவூட்டும் கண்ணாடி: இஸ்ரேலில் போர்வீரர்கள் நினைவு மண்டபத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி பதிவு
ஜெருசலேம்: யூதர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவுச்சின்னம் மனிதகுலத்திற்கு எதிரான தீமைகளை நினைவூட்டும் ஒரு கண்ணாடி என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார்.இந்த பயணத்தின் போது நேற்று அவர் இஸ்ரேல் பார்லிமென்டில் (நெசட்) உரையாற்றினார். அங்கு அவருக்கு உயரிய பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இரண்டாம் உலகப்போரில் நாஜி படையினர் 60 லட்சம் யூதர்களை கொன்று குவித்தனர். அதன் நினைவாக ஜெருசலேமில் உலக ஹோலோகாஸ்ட் நினைவு மையம் அமைக்கப்பட்டது.
இங்குள்ள நினைவு மண்டத்திற்கு இன்று பிரதமர் மோடியும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் நினைவாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதை தொடர்ந்து
உயிரிழந்தவர்களின் பெயர்கள் அடங்கிய பெயர்களின் புத்தகம் மற்றும் குழந்தைகள் நினைவுச் சின்னத்தை அவர்கள் பார்வையிட்டனர்.
அங்குள்ள வருகை குறிப்பில், இந்த நினைவுச்சின்னம் மனிதகுலத்திற்கு எதிரான தீமைகளை நினைவூட்டும் ஒரு கண்ணாடி என்று பிரதமர் மோடி தனது எழுதினார்.
அதன் பின்னர் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் உடன் பிரதமர் நரேந்திர மோடி, யுவாட் வாஷெம் ஹோலோகாஸ்ட் நினைவு மையத்திற்கு சென்று இருவரும் இணைந்து ஒரு மரக்கன்றை நட்டனர்.
இந்த மரக்கன்று நடும் நிகழ்வு, இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான ஆழமான நட்பு மற்றும் வளர்ந்து வரும் உயர்மட்ட உறவின் குறியீடாக அமைந்தது.இதனைத் தொடர்ந்து அதிபர் மாளிகையில் நடைபெற்ற சந்திப்பில், "இஸ்ரேல் மக்கள் உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறார்கள்" என அதிபர் ஹெர்சாக் பிரதமர் மோடியிடம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பல நூற்றாண்டுகளாக யூதர்கள் அகண்ட நில உரிமை வன்முறை மூலம் அபகரிக்க பட்டு, வரலாறு மாறி எழுதப்பட்டு வருகிறது. அகண்ட பாரத தேச இந்து மக்கள் நில உரிமை வன்முறை மூலம் அபகரிக்கப்பட்டு வரலாறு மாறி எழுதப்பட்டு வருகிறது. பிரிப்பில் வீட்டோ ரஷியா, சீனா முக்கிய பங்கு. உலக நாட்டாமை வியாபாரத்தில் கவனம்.
இதேபோல் இந்தியாவிலும் இந்துக்களுக்கு எதிராக பல நூற்றாண்டுகளாக்க்க நடந்த லட்சக்கணக்கான பாதக கொலைகளுக்கு ஒரு கண்ணாடியும் ஒரு சரித்திர ரீதியான அரும்காட்சியகமும் தேவை. வரும் பிற நாட்டுத் தேசிய தலைவர்களை இங்கு அழைத்து செல்லவேண்டும். ஜெய் பாரத்
Visit to this place gives wrong communication in the global politics.
so what...why are you worried?மேலும்
-
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்
-
ஏஐ, சைபர் பாதுகாப்பு முதல் வர்த்தகம் வரை: இந்தியா - இஸ்ரேல் ஒப்பந்தம்
-
எளியவர் இதயங்களை இன்னும் ஆள்கிறார் எம்ஜிஆர்: திமுகவினர் 'ஷாக்' ஆகும் வீடியோ வைரல்!
-
20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை; ஏப்ரல் முதல் கட்டாயம்!
-
சாத்தியமற்ற திட்டங்களுக்கு அடிக்கல்: திமுக அரசை சாடிய அன்புமணி
-
நீதித்துறை ஊழல் பாடத்தை எழுதியவர்கள் மீது நடவடிக்கை: மத்திய அரசு