லோக்சபா மரபை மீறி ராகுல் உயர்வானவரா: பார்லியில் மத்திய அமைச்சர் கேள்வி
புதுடில்லி: காங்கிரஸ் எம்பி ராகுல் லோக்சபா மரபை விட உயர்வானவரா என்ன? ஒருவர் அவையில் பேச சபாநாயகர் அனுமதி வேண்டும் என்ற விதி கூட தெரியாதா? என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கேள்வி எழுப்பி உள்ளார்.
லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கிரண் ரிஜிஜூ பேசியதாவது: இந்த அவையில் அனைத்து எம்பிக்களும் சமம், சபையில் பேசுவதற்கு அனைவருக்கும் தலைவரின் அனுமதி தேவை. அவர் ஒரு அமைச்சர் என்பதால் மட்டும் மைக்ரோபோன் தானாகவே இயங்காது.
காங்கிரஸ் எம்பி ராகுல் லோக்சபா மரபை மீறி உயர்வானவரா என்ன ? ஒருவர் அவையில் பேச சபாநாயகர் அனுமதி வேண்டும் என்ற விதி கூட தெரியாதா? ஓம் பிர்லா சபாநாயகராக இருந்த காலத்தில் செய்யப்பட்ட சீர்திருத்தங்களை யாராலும் மறுக்க முடியாது. ஓம் பிர்லா சபாநாயகராக இருந்த காலத்தில் பூஜ்ஜிய நேரத்தில் எழுப்பப்பட்ட விஷயங்கள் மிக அதிகம்.
மேலும் விதி 377 இன் கீழ் எழுப்பப்பட்ட அதிக எண்ணிக்கையிலான விஷயங்கள், பொது நலன் சார்ந்த விஷயங்கள், சிறப்பு குறிப்புகள் அனைத்தும் ஓம் பிர்லா சபாநாயகராக இருக்கும் போது செய்யப்பட்டன.பிரதமர் இங்கே அமர்ந்திருக்கிறார். இதுபோன்ற ஒரு நிகழ்வை நான் முதல்முறையாகப் பார்த்தேன். ராகுல் அங்கிருந்து ஓடி வந்து பிரதமரைக் கட்டிப்பிடிக்கிறார். அப்படி ஒரு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
எதிர்க்கட்சியைச் சேர்ந்த 50 எம்.பி.க்கள் என்னைச் சந்தித்து, சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தை எதிர்க்கிறோம் என்று கூறியுள்ளனர். ஆனால் அரசியல் நிர்பந்தங்களால், அவர்கள் அதை ஆதரிக்கிறார்கள். இவ்வாறு கிரண் ரிஜிஜூ பேசினார்.
சபாநாயகரை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தின் மீது 10 மணி நேர விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற சட்டப்படி ஒரு சட்டம் இயற்றும் போது அதை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் விவாதம் நடத்தி பின் அதில் உள்ள குறைகளை மாற்றியமைத்து அதை நடைமுறை படுத்த வேண்டும் இந்த கேடுகெட்ட எழவெடுத்த ஆட்சி திடீர் காபி திடீர் நூடுல்ஸ் மாதிரி ஒரு சட்டத்தை நடைமுறை படுத்துவது எந்த நாட்டு மரபு எசமா? மக்களே ஒரு காலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் 3 மாதத்திற்கு ஒரு முறை எல்லா மாநில முதலமைச்சர்கள் கூட்டம் கூட்டி மாநில பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் ஞாபகம் இருக்கிறதா? கடந்த 13 வருடமாக அது நடந்து இருக்கிறதா? மாநிலங்களே இருக்கக் கூடாது எனப்துதான் இந்த தீவிரவாத புற்றுநோய் கூட்டத்தின் திட்டமே
தோற்கப் போகும் தீர்மானத்திற்கு 10 மணி நேரம்.வீணாகும் மனித நிமிடங்கள்.
திடிரென்று ராகுலு ஓடிவந்து பிரதமரை அன்று கட்டிபிடித்தது சபை நாகரிகம் தெரியாத ஓர் அரசியல்வாதி இப்போது எதிர்கட்சித்தலைவர் கொஞ்சம்கூட வெட்கமாக இல்லை
எதிர்கட்சி எம். பி. என்றால் எல்லாவிதமான ரகளை மற்றும் ஒருவர் பேசும்போது கூச்சலிடுவதுதான் தற்போதைய நாகரீகம். என்னே இவர்களின் பொறுப்பு!
சபாநாயகரின் எதிர்க்கட்சி நட்பு மற்றும் ஒழுக்கமின்மைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை இல்லாதது அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது.
கொஞ்சமாவது நாட்டை பற்றி சிந்திப்பவரிடம் கேட்டால் பதில் கிடைக்கும். அது இல்லாவதவரிடம் ரிப்ளை நாகி ஹை
இதில் மத்திய அரசு மற்றும், சபாநாயகர் மீதுதான் தவறு உள்ளது. ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் மக்களின் தலையாய பிரச்சனைகளை பேசாமல் ஆதாரமில்லாத பிரச்சனைகளை கையில் எடுத்துக் கொண்டு அவையை தொடர்ந்து நடத்த விடாமல் எதிர் கட்சியினர் தொடர்ந்து ரகளை செய்து வருகிறார்கள்.சபாநாயகர் ஓம் பிர்லா மிகவும் மென்மையாக அவர்களிடம் நடந்து கொள்கிறார். அது அவர்களுக்கு வசதியாக போய் விட்டது. இன்றைய நிலையில் அன்றைய எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் எம்.ஜி.ஆர் சொல்லியும் கேட்காமல் ஒரே உத்தரவில் அத்தனை தி.மு.க எம்.எல்.ஏக்களையும் டிஸ்மிஸ் செய்த பால் ஹெக்டர் பாண்டியன் போன்ற உறுதியான சபாநாயகர்கள்தான் எந்த விதியையும் பின் பற்றாத ராகுல் போன்றவர்கள் எதிர்கட்சித் தலைவராக இருக்கும் இன்றைய நாடாளு மன்றத்திற்கும் தேவை.
If someone thinks, they are above law and its their birth Right, no one can help for such arrogance. People have already shown such peoples place in democracy If they dont introspect and give chance to the deserving people in their own partyies, even God cannot save them
பின்னே நடுநிலைமையைக் கற்றுக் கொள்ள முடியும்?
எந்த காங்கிரஸ் சபாநாயகர் நடுநிலையாக இருந்தார்?மேலும்
-
தினந்தோறும் பாலியல் குற்ற சம்பவங்கள்; தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம்
-
தமிழகத்தில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைவு: உள்துறை செயலர், டிஜிபி பேட்டி
-
அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போர் முடிவுக்கு வர வேண்டுமா: 3 நிபந்தனை விதிக்கிறது ஈரான்
-
40 நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி: பற்றாக்குறை இல்லை என மத்திய அரசு உறுதி
-
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க வேறு நாட்டிடம் ஏன் அனுமதி வாங்க வேண்டும்: ராகுல் கேள்வி
-
மோனலிசாவிற்கு கல்யாணம்.