காஸ் உற்பத்தி 10 சதவீதம் அதிகரிப்பு; உணவகங்களுடன் பேச 3 பேர் குழு - மத்திய அரசு
புதுடில்லி: இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் முழு அளவில் செயல்படுகின்றன. கடந்த சில நாட்களில் காஸ் உற்பத்தி 10 சதவீதம் அதிகரித்து உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான தாக்குதல் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. இதன் பாதிப்பு பல்வேறு நாடுகளில் தென்படுகிறது. காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பதுக்கலை தடுக்க மத்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை கையில் எடுத்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாக ஏஎன்ஐ நிறுவனம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: காஸ் சிலிண்டர் சப்ளை தொடர்பாக, உணவக சங்கங்களுடன் விரைவில் எண்ணெய் நிறுவனங்கள் ஆலோசனை நடத்தி அவர்களின் பிரச்னைகளை தெரிந்து கொள்ளும்.
அவர்களின் பிரச்னைகளை கேட்க ஐஓசி, எச்பிசிஎல் மற்றும் பிபிசிஎல் நிர்வாக இயக்குநர்கள் அடங்கிய 3 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. வணிக ரீதியிலான காஸ் சிலிண்டர் குறித்த அவர்களின் உண்மையான பிரச்னைகள் சரி செய்து கொடுக்கப்படும். 3 பேர் குழு தேவைக்கு ஏற்ப விநியோகத்தை சீரமைக்கும்.
கடந்த சில நாட்களில் காஸ் உற்பத்தி 10 சதவீதம் அதிகரித்துள்ளது. எல்பிஜி மற்றும் எல்என்ஜி ஆகியவை பல்வேறு நாடுகளில் இருந்து வருகின்றன. விரைவில் புதிய நாடுகளில் இருந்தும் வரும்.
முன்பு பிரச்னை இருந்தது. ஆனால், இன்று பெட்ரோலிய பொருட்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இஸ்ரேல் - ஈரான் இடையிலான மோதலுக்கு முன்பே இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் முழு அளவில் செயல்பட்டு வருகின்றன. ஹார்முஸ் நீரிணைக்கு வெளியே இருந்து 70 சதவீத கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்த இடையூறுகளை சமாளிக்க ஏற்கனவே தயாராகிவிட்டோம். இந்த பிரச்னை முடிந்ததும், மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியா சிறப்பாக மீண்டு வரும். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்படுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்த வேண்டும்.
இந்த ஹோட்டல் ஓனர்கள் எல்லாம் எங்களுக்கு கேஸ் சிலிண்டர் கிடைக்கவில்லை என்று ஊடகத்தில் ஒரே ஒப்பாரி வைத்தானுக. அதற்கு காரணம் மார்ச் 9 ம் தேதி வருமானவரி துறையிடம் இருந்து இந்தியா முழுவதும் உள்ள 64000 ஹோட்டல்களுக்கு அவர்களுடைய வருமானத்தை மறைத்து வரி கட்டாமல் இருந்ததற்காக நோட்டீஸ் அனுப்ப பட்டது. அதாவது அரசாங்கத்துக்கு வர வேண்டிய வரியை போலி பில் மூலமாக குறைத்து கணக்கு காட்டியிருக்கிறார்கள் என்பதை சமீபத்திய செயற்கை கணினி நுண்ணறிவான AI மூலம் கண்டுபிடித்து 64000 ஓட்டல்களில் சோதனை நடத்தினார்கள். அப்படி நடத்தப்பட்ட சோதனையின் போது சுமார் 400 கோடிக்கு மேல் அவர்கள் தங்களுடைய வருமானத்தை மறைத்திருக்கிறார்கள் என்று தெரிய வந்தது. அதற்காக அரசு சார்பில் வரி ஏய்ப்பு செய்த அனைத்து ஓட்டல்களுக்கும் விளக்கம் கேட்டு Email மூலமாக நோட்டீஸ் அனுப்ப பட்டது. அதன் பிறகுதான் நேற்றிரவில் இருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு
கேஸ் சிலிண்டர்கள் கிடைக்கவில்லை என்று ஓட்டல் உரிமையாளர்கள்
வதந்தியை பரப்ப ஆரம்பித்தார்கள். இதனால் பொதுமக்களாகிய நமக்கு என்ன பிரச்சனை என்றால் ஹோட்டல் சாப்பாடு நூறு ரூபாய் என்றால் அதில் ஐந்து ரூபாய் வரியாகும். அந்த நூறு ரூபாய் என்பதே அவர்களுக்கு உண்டான லாபத்தில் வரும் சேர்ந்த தொகைதான். அதற்கு மேல் நாம் கொடுக்கும் ஐந்து ரூபாயை நாங்கள் மத்திய அரசுக்கு வரியாக கட்டுகிறோம் என்று கூறிதான் நம்மிடம் வசூலிக்கிறார்கள். ஆனால் அப்படி நம்மிடம் வசூலித்த பணத்தை அரசாங்கத்திடம் காண்பிக்காமல் இவர்களே ஆட்டையை போட்டு விடுவார்கள். ஒரு ஓட்டலில் 200 பேர் சாப்பிடுகிறார்கள் என்றால் வெறும் 100 பேர்கள்தான் சாப்பிடுவதாக கணக்கு காட்டி மீதம் நூறு பேரின் வரிப்பணம் ஐந்து ரூபாயை அந்த ஓட்டல்காரர்களே அபகரித்துக் கொள்வார்கள். இது எவ்வளவு பெரிய ஊழல்? இந்த ஊழலுக்கு எதிராக மத்திய அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினால் அதற்கு நேர்மையாக பதில் சொல்ல வக்கில்லாத ஓட்டல் உரிமையாளர்கள் மதியம் நோட்டீஸ் வந்தவுடனேயை இரவு இந்ந அரசின் அலட்சியத்தால் கேஸ் சிலிண்டர்கள் பற்றாக்குறையாகி விட்டது என்று வதந்தியை பரப்புகிறார்கள். தமிழக மக்களுக்காகவே இந்த விழிப்புணர்வு பதிவு.மேலும்
-
தினந்தோறும் பாலியல் குற்ற சம்பவங்கள்; தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம்
-
தமிழகத்தில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைவு: உள்துறை செயலர், டிஜிபி பேட்டி
-
அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போர் முடிவுக்கு வர வேண்டுமா: 3 நிபந்தனை விதிக்கிறது ஈரான்
-
40 நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி: பற்றாக்குறை இல்லை என மத்திய அரசு உறுதி
-
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க வேறு நாட்டிடம் ஏன் அனுமதி வாங்க வேண்டும்: ராகுல் கேள்வி
-
மோனலிசாவிற்கு கல்யாணம்.