1 கோடி மதிப்பு சோலார் தொழில்நுட்ப உரிமம்: அனபாண்ட் நிறுவனத்திற்கு வழங்கிய எஸ்ஆர்எம்
சென்னை: ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சோலார் தொழில்நுட்ப உரிம ஒப்பந்தத்தை அனபாண்ட் நிறுவனத்துடன் எஸ்ஆர்எம் பல்கலை மேற்கொண்டுள்ளது. இது அடிப்படை ஆராய்ச்சியில் இருந்து பயன்பாட்டு ஆராய்ச்சிக்கு முன்னேற்றம் அடைவதை வலியுறுத்தும் என பல்கலை துணைவேந்தர் கூறினார்.
இந்தியாவின் தூய்மையான ஆற்றல் உற்பத்தியை வலுப்படுத்தும் ஒரு முக்கிய முன்னேற்ற நடவடிக்கையாக, எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (SRMIST) தனது காப்புரிமை பெற்ற சோலார் செல் என்கேப்சுலண்ட் (சூரிய ஒளி மின்கல பாதுகாப்பு உறை) தொழில்நுட்பத்திற்கான உரிமத்தை சென்னையைச் சேர்ந்த அனபாண்ட் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. பல்கலைக்கழகங்களில் செய்யப்படும் ஆராய்ச்சி அடிப்படையிலான கண்டுபிடிப்புகளை வணிகமயமாக்குவதில் இந்த ஒப்பந்தம் ஒரு முக்கிய மைல்கல்லாகும். உள்நாட்டு தொழில்நுட்ப வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் கல்வி நிறுவனங்களின் பங்கு வளர்ந்து வருவதை இது காட்டுகிறது.
இந்த உரிம ஒப்பந்தத்தின் மூலம், காப்புரிமை பெற்ற தொழில்நுட்பத்திற்காக ரூ.1 கோடி என்ற தொகை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படுகிறது. அதற்கும் கூடுதலாக, இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் தயாரிப்புகளின் வணிக ரீதியிலான விற்று முதலோடு தொடர்புடைய ராயல்டி தொகையும் அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு அனபாண்ட் நிறுவனத்தால் வழங்கப்படும். ஆய்வக கண்டுபிடிப்புகளை சிறந்த தொழில்முறை தீர்வுகளாக மாற்றுவதற்கு தொழில்துறைக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை இக்கூட்டாண்மை பிரதிபலிக்கிறது.
2030ம் ஆண்டிற்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் சூரிய ஒளி மின்சாரம் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சோலார் உற்பத்தி தொழில்துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், சோலார் பேனல்களைப் பாதுகாத்து அவை நீண்ட காலம் உழைக்க உதவும் 'என்கேப்சுலண்ட்' போன்ற மேம்பட்ட தயாரிப்புகள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்துறைக்கு மிக முக்கியமான பாகங்களாக வளர்ச்சி கண்டு வருகின்றன.
SRMIST-ன் இணை வேந்தர் (கல்வி) டாக்டர் பி. சத்தியநாராயணன் கூறுகையில், "கல்விசார் ஆராய்ச்சிகளை தொழில்துறை மற்றும் நாட்டின் தேவைகளுக்கேற்ற தீர்வுகளாக மாற்றுவதில் இது ஒரு முக்கிய படியாகும்" என்றார். "பல்கலைக்கழகங்கள் கல்வி அறிவை வழங்குவதோடு மட்டும் நின்றுவிடாமல், அந்த அறிவை நிஜ உலக சூழலில் மக்களுக்குப் பயன்படும் தீர்வுகளாக மாற்ற வேண்டும். பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்படும் ஒரு தொழில்நுட்பத்தை தொழில்துறையினர் பயன்படுத்த முன்வரும்போது, அது ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் திருப்தியைத் தருகிறது" என்று அவர் கூறினார். மேலும், பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே தொழில்துறை ஆராய்ச்சி மையங்களைக் கொண்டுவர ஒரு 'தொழில்துறை ஆராய்ச்சி பூங்காவை' SRMIST நிறுவத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
SRMIST-ன் துணைவேந்தர் பேராசிரியர் சி. முத்தமிழ்செல்வன் கூறுகையில், "கல்வி கற்பிப்பதில் இருந்து ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை நோக்கிய எங்கள் நீண்ட பயணத்தின் விளைவுதான் இந்த ஒப்பந்தம். கடந்த இருபது ஆண்டுகளில் எங்கள் ஆராய்ச்சி கட்டமைப்பு வலுவடைந்துள்ளது. ஆற்றல், சுற்றுச்சூழல், சுகாதாரம், நீர்சார் தொழில்நுட்பங்கள் மற்றும் அதிரடியான புத்தாக்கங்கள் போன்ற பல்வேறு பிரிவுகளில் நாங்கள் தற்போது ஆண்டுக்கு ரூ.35 கோடி ஆராய்ச்சி நிதியைப் பெறுகிறோம்.
எங்கள் பல்கலைக்கழகம் 538-க்கும் மேற்பட்ட காப்புரிமைகளை இதுவரை பெற்றிருக்கிறது. சுற்றுச்சூழலால் சோலார் செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுத்து, அவற்றின் ஆயுளை நீட்டிப்பதற்கான தொழில்நுட்பத்தை கண்டறிந்திருப்பதன் மூலம், நாங்கள் அடிப்படை ஆராய்ச்சியிலிருந்து பயன்பாட்டு ஆராய்ச்சிக்கு முன்னேறியுள்ளோம். எங்கள் ஆராய்ச்சிகள் வெறும் கல்விசார் ஆய்வு கட்டுரைகளாக மட்டும் இல்லாமல், சமூகத்திற்குப் பயன்படும் தீர்வுகளாக முன்னேற்றம் அடைய வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்," என்று அவர் கூறினார். அனபாண்ட் நிறுவனத்துடன் தொழில்நுட்ப உரிம மாற்றத்திற்கான இக்கூட்டணி இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொழில்முனைவுத்திறன் மற்றும் புத்தாக்க இயக்குநரகத்தின் (DEI) இயக்குநர் டாக்டர் சாந்தனு பாட்டீல் கூறுகையில், காப்புரிமை பெறுவதற்கும், புத்தொழில் நிறுவனங்களை உருவாக்குவதற்கும், தொழில்நுட்ப வணிகமயமாக்கலுக்கும் சரியான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது என்றார். "மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் புதிய யோசனைகளை தொழில்நுட்பங்களாகவும், ஆக்கப்பூர்வ தாக்கமேற்படுத்தும் சிறந்த தீர்வுகளாக மாற்றவும் இந்த இயக்குனரகம் ஒரு மையமாக செயல்படுகிறது. பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பரிமாற்ற அலுவலகம் (TTO) இந்த கண்டுபிடிப்புகளை தொழில்துறையுடன் இணைந்து வணிகமயமாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது" என்று அவர் விளக்கினார்.
இந்த தொழில்நுட்பத்தை SRMIST ன் வேதியியல் துறை பேராசிரியர் கே. அனந்தநாராயணன் மற்றும் அவரது ஆராய்ச்சி குழுவினர் உருவாக்கினர். இதன் முக்கியத்துவம் குறித்து விளக்கிய அவர், "சோலார் செல்கள் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும், அவை வெயில், ஈரம், தூசு மற்றும் வெப்ப மாறுபாடுகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவை. இந்த 'என்கேப்சுலண்ட்' உறை, சோலார் பேனல்களை 25 முதல் 30 ஆண்டுகள் வரை பாதுகாக்கிறது. இது ஸ்மார்ட்போன் திரையைப் பாதுகாக்கும் 'டெம்பர்ட் கிளாஸ்' போன்றது," என்றார்.
எதிர்கால சோலார் தொழில்நுட்பங்களான TOPCon மற்றும் பெரோவ்ஸ்கைட்-சிலிக்கான் மின்கலங்களுக்காக இந்த சிறப்பு பாலிமர் உறையை உருவாக்க ஆராய்ச்சி குழுவினர் 4 முதல் 5 ஆண்டுகள் வரை அயர்வின்றி கடுமையாக உழைத்துள்ளனர். "எதிர்காலத்தில் சூரிய சக்திதான் உலகை இயக்கும். அந்த எதிர்காலத்தை நம்பகமானதாக மாற்றுவதில் நாங்களும் எங்களது சிறிய பங்களிப்பை வழங்குவதில் பெருமைப்படுகிறோம்" என்று பேராசிரியர் அனந்தநாராயணன் கூறினார்.
1979ல் தொடங்கப்பட்ட அனபாண்ட் லிமிடெட் நிறுவனத்திற்கு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் தனது செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்துவதில் இது ஒரு முக்கிய நடவடிக்கையாகும். இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம். ராஜன் கூறுகையில், "இந்தத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் பெரும் வரவேற்பைப் பெறும். இதனை வணிக ரீதியாக சந்தைக்குக் கொண்டு செல்வதில் SRMIST உடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்," என்றார்.
இஸ்ரோ (ISRO) மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனங்களுடன் பணியாற்றிய அனுபவம் தங்கள் நிறுவனத்திற்கு இருப்பதாகவும், ஆய்வகக் கண்டுபிடிப்புகளை நம்பகமான தயாரிப்பு பொருட்களாக உருவாக்குவது அதிக சிக்கலானது; எனினும், இத்தொழில்நுபட்தை இந்த தொழில்நுட்பத்தை SRMIST ன் வேதியியல் துறை பேராசிரியர் கே. அனந்தநாராயணன் மற்றும் அவரது ஆராய்ச்சி குழுவினர் உருவாக்கினர். இதன் முக்கியத்துவம் குறித்து விளக்கிய அவர், "சோலார் செல்கள் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும், அவை வெயில், ஈரம், தூசு மற்றும் வெப்ப மாறுபாடுகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவை. இந்த 'என்கேப்சுலண்ட்' உறை, சோலார் பேனல்களை 25 முதல் 30 ஆண்டுகள் வரை பாதுகாக்கிறது. இது ஸ்மார்ட்போன் திரையைப் பாதுகாக்கும் 'டெம்பர்ட் கிளாஸ்' போன்றது," என்றார்.
எதிர்கால சோலார் தொழில்நுட்பங்களான TOPCon மற்றும் பெரோவ்ஸ்கைட்-சிலிக்கான் மின்கலங்களுக்காக இந்த சிறப்பு பாலிமர் உறையை உருவாக்க ஆராய்ச்சி குழுவினர் 4 முதல் 5 ஆண்டுகள் வரை அயர்வின்றி கடுமையாக உழைத்துள்ளனர். "எதிர்காலத்தில் சூரிய சக்திதான் உலகை இயக்கும். அந்த எதிர்காலத்தை நம்பகமானதாக மாற்றுவதில் நாங்களும் எங்களது சிறிய பங்களிப்பை வழங்குவதில் பெருமைப்படுகிறோம்" என்று பேராசிரியர் அனந்தநாராயணன் கூறினார்.
(படத்தில்: ஆபிரகாம், அனபாண்ட் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர், எம். ராஜன், அனபாண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், டாக்டர் பா. சத்தியநாராயணன், இணைவேந்தர் (கல்வி), எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம், பேராசிரியர் செ. முத்தமிழ்செல்வன், துணைவேந்தர், டாக்டர் எஸ். பொன்னுசாமி, பதிவாளர்)
1979-ல் தொடங்கப்பட்ட அனபாண்ட் லிமிடெட் நிறுவனத்திற்கு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் தனது செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்துவதில் இது ஒரு முக்கிய நடவடிக்கையாகும். இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. எம். ராஜன் கூறுகையில், "இந்தத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் பெரும் வரவேற்பைப் பெறும். இதனை வணிக ரீதியாக சந்தைக்குக் கொண்டு செல்வதில் SRMIST உடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்," என்றார். இஸ்ரோ (ISRO) மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனங்களுடன் பணியாற்றிய அனுபவம் தங்கள் நிறுவனத்திற்கு இருப்பதாகவும், ஆய்வகக் கண்டுபிடிப்புகளை நம்பகமான தயாரிப்பு பொருட்களாக உருவாக்குவது அதிக சிக்கலானது; எனினும், இத்தொழில்நுபட்தைமக்களிடம் வெற்றிகரமாக கொண்டு சேர்க்க இந்த ஒத்துழைப்பு உதவும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அனபாண்ட் நிறுவனம் இந்தியா முழுவதும் பல உற்பத்தி ஆலைகளையும் பரந்த விநியோக வலையமைப்பையும் கொண்டுள்ளது. அனபாண்ட் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் திரு. ஆபிரகாம் பேசுகையில், "பல்கலைக்கழகங்கள் புதிய தொழில்நுட்பங்களையும், கண்டுபிடிப்புகளையும் உருவாக்கும் மையங்களாக உள்ளன. தொழில்துறையுடன் அவர்கள் இணையும் போது, அந்த ஆய்வகக் கண்டுபிடிப்புகள், வணிக ரீதியிலான உற்பத்தி அளவை எட்டி சமூகத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுகின்றன. இந்த ஒப்பந்தம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவுவதோடு, 'தற்சார்பு இந்தியா' என்ற தேசிய தொலைநோக்குப் பார்வைக்கும் ஆதரவளிக்கிறது" என்று கூறினார்.
பல்கலைக்கழகத்தின் சிறந்த கட்டமைப்பு வசதிகள் இந்த உரிம ஒப்பந்தத்தை சாத்தியமாக்கியிருக்கின்றன என்று SRMIST ன் தலைவர்கள் சுட்டிக்காட்டினர். பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பரிமாற்ற அலுவலகம் (TTO) ஏற்கனவே தொழில்துறையுடன் 17-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களை செய்துள்ளது. இருப்பினும், ராயல்டி முறையை உள்ளடக்கிய முதல் முக்கிய ஒப்பந்தம் இதுவேயாகும். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை வணிகமயமாக்குவதற்கான வாய்ப்புகளை ஆராய பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் 'தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க உச்சி மாநாட்டை' (IRIS) நடத்துகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், அறிவை உருவாக்குவது மட்டுமின்றி, இந்தியாவின் தொழில் வளர்ச்சி மற்றும் நிலையான எதிர்காலத்திற்குப் பங்களிக்கும் ஒரு முக்கிய நிறுவனமாக SRMIST தன்னை நிலைநிறுத்தியிருக்கிறது.
மேலும்
-
தினந்தோறும் பாலியல் குற்ற சம்பவங்கள்; தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம்
-
தமிழகத்தில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைவு: உள்துறை செயலர், டிஜிபி பேட்டி
-
அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போர் முடிவுக்கு வர வேண்டுமா: 3 நிபந்தனை விதிக்கிறது ஈரான்
-
40 நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி: பற்றாக்குறை இல்லை என மத்திய அரசு உறுதி
-
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க வேறு நாட்டிடம் ஏன் அனுமதி வாங்க வேண்டும்: ராகுல் கேள்வி
-
மோனலிசாவிற்கு கல்யாணம்.