வளைகுடா நாடுகளின் வங்கிகள்,நிதி நிறுவனங்களை தாக்குவோம்; ஈரான் அறிவிப்பு
டெஹ்ரான்: வளைகுடாவில் உள்ள நாடுகளின் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் அறிவித்து இருக்கிறது.
ஈரானை எதிரான அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் போர் 2வது வாரத்தை எட்டி உள்ளது. அமெரிக்காவின் தீவிர தாக்குதலுக்கு ஈடு கொடுக்கும் வகையில் வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. டெஹ்ரானில் உள்ள வங்கி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார்.
இதன் எதிரொலியாக, அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்த வளைகுடா நாடுகளில் உள்ள வங்கிகள். நிதி நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் அறிவித்துள்ளது. இது குறித்து ஈரான் ராணுவ கூட்டு தலைமையான கதம் அல் அன்பியாவின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது;
ஈரான் தலைநகரில் உள்ள வங்கி மீது அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இது சட்டவிரோதமானது, வழக்கத்திற்கு மாறானது. இதன் மூலம் ஈரான் படையினருக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குச் சொந்தமான வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது குறி வைக்கும் உரிமையை அமெரிக்கா எங்களுக்கு அளித்து இருக்கிறது.
எங்களின் பதிலடி நடவடிக்கைக்காக அமெரிக்கா காத்திருக்க வேண்டும். அமெரிக்கா, இஸ்ரேலிய வங்கிகளை நடத்தும் நாடுகளில் உள்ள மக்கள், இந்த வங்கிகள் இருக்கும் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வரவேண்டாம்.
இவ்வாறு ராணுவ கூட்டுத் தலைமை அறிவித்துள்ளது.
America will now reduce their diplomats in Gulf countries. They don't care about other countries security and economy
மலையாளத்தான் கொட்டம் அடங்கிடும்... வாழ்க ஈரான்
திமுக ஓனர் குடும்பம் போல இறைதூதர் தனது வாரிசு யாரென அறிவித்திருந்தால் இந்த ஷியா - சன்னி சண்டை வந்திருக்குமா? உலகமே நிம்மதியாக இருந்திருக்கும்.
குறிப்பா தமிழக கார்பொரேட் குடும்பம் இன்வெஸ்ட் பண்ணியுள்ள எல்லாம் டார்கெட் பண்ணிடுங்க ஈரான் . உங்களுக்கு இந்தியாவில் இருந்து ஒரு கண்டிப்பான சப்போர்ட்டை பதிவு பண்ணுவேன்
வளைகுடாவில் உள்ள சன்னி முஸ்லிம் நாடுகள் கிருஸ்தவ நாடான அமெரிக்காவுடன் சேந்து ஈரானிய ஷியா முஸ்லிம்களை அழிக்க துணை போகிறது, ஆதலால் ஷியா முஸ்லிம் நாடான ஈரான் வளைகுடாவில் உள்ள சன்னி முஸ்லிம் நாடுகளை பழிவாங்க நினைப்பது ஆச்சரியம் ஒன்று இல்லை. உலகத்தில் அமைதி கெட அப்பாவி உயிர்கள் பலியாக இந்த கிருஸ்தவ மற்றும் சன்னி ஷியா முஸ்லிம் நாடுகளே காரணம், இந்த கும்பல்கள் வாழும் இடங்களில் இந்துக்கள் நிம்மதியாகவும் தன்மானத்துடனும் சுதந்திரமாகவும் வாழ்வது மிகவும் கடினம் பெண்கள் நிலைமையை கேட்கவே வேண்டாம்.
.ஈரான் செஞ்சாலும் செய்யும். அது ஒரு வெனிசுலா இல்லை என்பதை அமெரிக்காவுக்கு உணர்த்த அவர்கள் முடிவு செய்துள்ளார்கள் போல. ட்ரம்பின் கட்சிக்கு அமெரிக்காவில் பெரிய பின்னடைவு உண்டு என்று கணித்த்துள்ளார்கள். எனவே அவர்கள் போரினை நிறுத்த வைய்ப்பில்லை.மேலும்
-
தினந்தோறும் பாலியல் குற்ற சம்பவங்கள்; தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம்
-
தமிழகத்தில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைவு: உள்துறை செயலர், டிஜிபி பேட்டி
-
அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போர் முடிவுக்கு வர வேண்டுமா: 3 நிபந்தனை விதிக்கிறது ஈரான்
-
40 நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி: பற்றாக்குறை இல்லை என மத்திய அரசு உறுதி
-
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க வேறு நாட்டிடம் ஏன் அனுமதி வாங்க வேண்டும்: ராகுல் கேள்வி
-
மோனலிசாவிற்கு கல்யாணம்.