போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் கவர்னர் ரவி வழியனுப்பி வைப்பு!
சென்னை: போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன், கவர்னர் ரவி வழியனுப்பி வைக்கப்பட்டார்.
பீஹார் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி ரவி, தமிழக கவர்னராக, 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். தன் பதவிக் காலத்தில், இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கெடுத்தவர்களை பெருமைப்படுத்தும் நிகழ்வுகள் பலவற்றை முன்னெடுத்தார்.
மேலும், தான் பங்கேற்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், இந்திய பாரம்பரியம், தமிழக கலாசாரம் ஆகியவற்றை போற்றி பேசினார். அதேநேரம், தமிழக அரசுக்கும், கவர்னர் ரவிக்கும் இடையே பனிப்போர் மூண்டது.
தமிழக உயர் கல்வித் துறையின் கீழ் இயங்கும், பல்கலை துணை வேந்தர்கள் நியமனம், சட்டசபை உரை, சட்ட மசோதாக்கள் என, பல விவகாரங்களில், அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை, கவர்னர் ரவி மேற்கொண்டார்.
இந்த சூழலில், மேற்கு வங்க கவர்னராக பதவி வகித்து வந்த சி.வி.ஆனந்த போஸ், ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தமிழக கவர்னர் ரவி, மேற்கு வங்க கவர்னராக மாற்றம் செய்யப்பட்டார். தமிழக கவர்னர் பதவியை, கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகர் கூடுதலாக கவனிக்க உள்ளார்.
இந்நிலையில், கவர்னர் ரவி, தன் குடும்பத்தினருடன் டில்லி சென்றார். அவரை வழியனுப்பும் விதமாக, சென்னை விமான நிலையத்தில், அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
வாசகர் கருத்து (7)
vinay - ,
12 மார்,2026 - 07:12 Report Abuse
ஐயோ பாவம் 0
0
Reply
என்னத்த சொல்ல - chennai,இந்தியா
11 மார்,2026 - 21:55 Report Abuse
ஸ்டாலின் எவ்வளவோ கேட்டும், ஒன்றிய அரசு RN ரவியை மாற்றிவிட்டார்கள். DMK க்கு இது கொஞ்சம் பின்னடைவுதான்.. 0
0
vivek - ,
12 மார்,2026 - 06:49Report Abuse
கழுதைக்கு தெரியாது கற்பூர வாசனை... கற்றவற்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு...என்னத்த சொல்ல 0
0
raja - ,
12 மார்,2026 - 10:21Report Abuse
அப்ப..உனக்கு அந்த வாசனை தெரியாதுன்னு ஒத்துக்குற.... 0
0
Reply
KR india - ,இந்தியா
11 மார்,2026 - 21:32 Report Abuse
கவர்னர் பதவி என்பது அரசு என்ன தவறுகள் செய்தாலும், அதற்கிசைந்து ஒப்புதல் போடும் ரப்பர் ஸ்டாம்ப் பதவி அல்ல என்பதை அழுத்தமாக பதிவு செய்த அற்புத ஆளுநர் திரு.ரவி அவர்கள். தமிழகத்தில் இதுவரை பணியாற்றிய கவர்னர்களிலேயே, சிறந்த முறையில் பணியாற்றியவர். கவர்னர்பதவிக்குரிய மிடுக்குடனும், ஒவ்வொரு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும், மாணவர்களை ஊக்குவித்து உரையாற்றியதும், தமிழக கலாச்சார பெருமையை பறைசாற்றும் கோவில்களுக்கு சென்று வழிபட்டது மட்டுமல்லாமல், தமிழ் பாரம்பரியத்தை போற்றி பேசியதும் நினைவில் கொள்ளத்தக்கவை. இவரைப் போன்ற ஒரு தூயவர், நாணயஸ்தர் தமிழக முதல்வராக வர மாட்டாரா ? என்ற ஏக்கத்துடன், வாழ்க, வாழ்க தங்கள் புகழ் என்று போற்றி வணங்கி, வாழ்த்தி வழிஅனுப்புகிறோம் தமிழக மக்கள். தங்கள் பணிக்காலத்தில், தாங்கள் ஆற்றிய அளப்பரிய சேவைக்கு, மிக்க நன்றி கவர்னர் ரவி அவர்களே 0
0
Reply
Narayanan Muthu - chennai,இந்தியா
11 மார்,2026 - 21:23 Report Abuse
மார்ச் 6 தானே சனிப்பெயர்ச்சி. 0
0
vivek - ,
11 மார்,2026 - 22:11Report Abuse
நாராயணா...அதை சொல்வது அதிசயம் 0
0
Reply
மேலும்
-
தினந்தோறும் பாலியல் குற்ற சம்பவங்கள்; தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம்
-
தமிழகத்தில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைவு: உள்துறை செயலர், டிஜிபி பேட்டி
-
அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போர் முடிவுக்கு வர வேண்டுமா: 3 நிபந்தனை விதிக்கிறது ஈரான்
-
40 நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி: பற்றாக்குறை இல்லை என மத்திய அரசு உறுதி
-
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க வேறு நாட்டிடம் ஏன் அனுமதி வாங்க வேண்டும்: ராகுல் கேள்வி
-
மோனலிசாவிற்கு கல்யாணம்.
Advertisement
Advertisement