மதமாற்றம் செய்தோரை தடுத்த ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி கைது
தஞ்சாவூர்: திருவிடைமருதுார் அருகே மதமாற்றம் செய்த நபர்களை தடுத்து, அதை 'வீடியோ'வாக வெளியிட்ட, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார், திருநறையூர் வள்ளுவர் தெருவில், நேற்று (மார்ச் 10) ஒன்பது பேர் கொண்ட கும்பல், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று, கிறிஸ்துவ மத பிரசாரம் செய்து புத்தகங்களை வழங்கி, சர்ச்சுக்கு வரவழைத்து, மத பிரசாரம் செய்து கொண்டு இருந்தனர்.
இதற்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து அறிந்த திருநறையூரை சேர்ந்த ஆதித்யன், 30, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மக்கள் தொடர்பாளர். மதமாற்றும் செய்த நபர்களை தடுத்து நிறுத்தி, சரமாரியாக கேள்வி கேட்டு வீடியோவாக பதிவு செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இந்நிலையில், ஆதித்யனை போலீசார், திருவிடைமருதுார் டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். ஆதித்யன், மத உணர்வோடு, பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் விதமாக செயல்பட்டதாக, திருநறையூர் வி.ஏ.ஓ., ஜோதிநாயகம் மூலம் புகார் பெற்று, ஆதித்யனை போலீசார் கைது செய்தனர்.
தகவலறிந்த திருநறையூர் மக்கள், ஹிந்து அமைப்பினர் மற்றும் பா.ஜ.,வினர், திருவிடைமருதுார் டி.எஸ்.பி., அலுவலகம் முன் குவிந்தனர். இருப்பினும் இரவு, கும்பகோணம் நீதிமன்றத்தில், ஆதித்யனை போலீசார் ஆஜர்படுத்தினர்.
சூப்பர்
திமுக அரசாங்கம் இதே பணியை தான் செய்யும் ஸ்டாலினுக்கு பின்புறம் சர்வதேச அளவில் மதமாற்று கும்பலை இயங்கி வருகிறது கிறிஸ்தவ மதமாற்றும் கும்பலும் முஸ்லிம் மதமாற்றுப் புகழும் இயங்கி வருகிறது மதமாற்றும் மூலம் இயங்கி வருகிறது
இதற்கு ஒரே தீர்வு பிஜேபிக்கு ஓட்டு போட்டு ஆட்சி அமைக்க வைப்பது தான் சிறந்தது.
இது திராவிட மாடல் ஆட்சி என்று தெரியாதா? இங்கு தவறு செய்பவர்கள் பாதுகாக்க படுவார்கள், தவறை தட்டி கேட்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள். மானங்கெட்டவர்கள் திராவிட மாடல் ஆட்சிக்கு மீண்டும் ஓட்டு போடுவார்கள்.
திராவிட திருட்டு மாடலை ஆதரித்தால் நாளை அந்நிய தீய மதவாதிகள்
இந்துக்களை விட்டு வைக்க மாட்டார்கள். பயமுறுத்தல் இல்லை. உண்மை அது தான்.
பிரியன் வடை சொல்றாரு...எனக்கு ஓசியில் வேண்டும் என் குடும்பத்திற்கு ஓசியில் வேண்டும்...யார் ஓசியில் தருகிறார்களை அவர்களுக்கு காலம் முழுவதும் மண்டியிட்டு கொத்தடிமையாக இருப்பேன்..
கட்டாய மத மாற்றம் என்ற சொல் இந்துக்களான எங்களை அவமானப்படுத்தும் வார்த்தை. சுய அறிவு இல்லாதவர்கள் போல காட்டும் அரசியல். மதத்தை வைத்து அரசியல் செய்யும் ஒரு சிறு கூட்டத்தின் மோசடி. யாரும் யாரையும் கட்டாயமாக மதம் மாற்றிவிட முடியாது. யாரும் எந்த மதத்தையும் பின்பற்றவும் மறுக்கவும் எல்லாருக்கும் உரிமை உண்டு. அமைதியை விரும்பும் எங்களை போன்ற பொது மனிதர்களை அமைதியாக வாழ விடுங்கள்.
// என் கடையில் நல்ல பொருட்கள் விற்பனை செய்கிறேன்// உன்னோட கடையில் விலை குறைவாக நீ நல்ல பொருளை வைத்திருக்கிறாய் என்று கூறி வியாபாரம் செய்ய உனக்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அருகில் இருக்கும் பெரிய கடைக்காரனின் பொருட்கள் சரியில்லை அதனால் என் கடைக்கு வாருங்கள் என்று கூவி அழைப்பதுதான் தவறு. அதே போல் உன் கிறிஸ்தவ மதம் நல்ல மதம் அன்பை போதிக்கும் மதம் என்று கூறி இந்துக்களை மதம் மாற்றுவது பற்றி எங்களுக்கு கவலையில்லை. ஆனால் இந்துமதம் சாத்தான்களின் மதம் அதனால் புனிதமான கிறிஸ்தவ மதத்துக்கு மாறுங்கள் என்று கூவிக் கூவி அழைத்து பைபிளை வலுக்கட்டாயமாக கையில் திணித்து அப்பாவி இந்துக்களை மதம் மாற்றுவதைதான் தவறு என கண்டிக்கிறோம்.
உங்கள் கருத்து சரியானது. மிக மிக குறைந்த நபர்கள், கிறிஸ்தவ மதம் பற்றி தெரியாதவர்கள் இப்படி பிறர் உணர்வு மிகவும் புண்பட பேசுவது இருந்திருக்கிறது. அவர்களில் பலர் இப்போது உண்மையறிந்து செயல்படுவதும் உண்மை. 98 சதவிகித கிறிஸ்தவர்கள் அப்படி அல்ல. எல்லோரையும் மதித்து அன்பிக்கும் மனநிலை பெற்றவர்கள் என்பது உங்களுக்கும் தெரியும். .
விடியல் அரசின் போலீஸ், தேர்தல் நேரத்தில் அரசுக்கு ஜால்ரா அடிக்கும். மானம் கெட்ட திமுக அரசு
இது இந்தி எதிர்ப்பு மாடல் அல்ல. இந்துக்கள் எதிர்ப்பு மாடல். தீயசக்திகளின் மாடல்.மேலும்
-
தினந்தோறும் பாலியல் குற்ற சம்பவங்கள்; தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம்
-
தமிழகத்தில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைவு: உள்துறை செயலர், டிஜிபி பேட்டி
-
அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போர் முடிவுக்கு வர வேண்டுமா: 3 நிபந்தனை விதிக்கிறது ஈரான்
-
40 நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி: பற்றாக்குறை இல்லை என மத்திய அரசு உறுதி
-
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க வேறு நாட்டிடம் ஏன் அனுமதி வாங்க வேண்டும்: ராகுல் கேள்வி
-
மோனலிசாவிற்கு கல்யாணம்.