'சிவப்பாக இருந்ததால் சந்தேகிக்கலை!' : கவர்னர் மாளிகையில் மாணவர் துாங்கிய விவகாரத்தில் போலீசார் கொடுத்த அதிர்ச்சி
புதுச்சேரி: 'சிவப்பாக இருந்ததால் கவர்னரின் உறவினர் என்று நினைத்து, போதை மாணவரை சந்தேகப்படவில்லை' என, போலீசார் கூறிய தகவல், அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
புதுச்சேரி கவர்னர் மாளிகையில், 9ம் தேதி இரவு, 10:45 மணிக்கு குருசுக்குப்பம் சாலையில் உள்ள இரண்டாவது கிரில் கேட் வழியாக ஏறி குறித்து, ஜார்க்கண்ட் மாநில மாணவர் ஹர்திக் ஷா என்பவர் உள்ளே சென்று, கவர்னரின் மகன் அறையில் துாங்கினார். அதிகபட்ச பாதுகாப்பு வளையத்தில் உள்ள கவர்னர் மாளிகையில், சர்வ சாதாரணமாக 'கேட்' ஏறி நுழைந்து, போதை மாணவர் துாங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சம்பவம் நடந்த அன்றிரவு கவர்னர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஐ.ஆர்.பி.என்., போலீசார் மற்றும் ஊழியர்களை வெளியே விடாமல், கவர்னர் மாளிகையிலேயே போலீஸ் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை செய்தனர். போதை மாணவர் முதல் மாடி வளாகத்தில் நடந்து செல்லும்போது, போலீஸ்காரர் ஒருவர் பார்த்துள்ளார்.'அந்த மாணவர் சிவப்பாகவும், வட மாநில சாயலில் இருந்ததாலும் கவர்னர் கைலாஷ்நாத்தின் உறவினர் என்று நினைத்து சந்தேகப்படவில்லை' என்று அந்த போலீஸ்காரர் கூறியுள்ளார். அந்த தகவல், போலீஸ் அதிகாரிகளை கடும் அதிர்ச்சி மற்றும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் பணியில் அலட்சியமாக இருந்த அனைவரையும் ஆயுதப்படைக்கு தற்காலிகமாக மாற்றி உள்ளனர்.இதற்கிடையே, போதை மாணவர் ஏறி வந்த இரண்டாவது நுழைவுவாயிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
போலீஸ் கணிப்பில் கருப்பா இருப்பவர்கள் எல்லோரும் திருடர்கள்.வெள்ளையா இருப்பவர்கள் அரிச்சந்திரர்களா?
என்னப்பா சொல்ல வர்றீங்க, கவர்னரின் உறவினர் எல்லாம் போதையில் இருப்பாங்களா நாட்டுக்குள்ள போதை பொருள் வருவதே குஜராத் துறைமுகம் வழியாகத்தான். இந்த கவர்னரின் பாஜககாரர் தானே.
இன்னமும் cctv கேமரா போட்டு கண்காணிக்காமல் மனிதர்களே போட்டு அலட்சியமாக இருப்பது வெட்கக்கேடு...
அங்கு பணியில் இருப்பவர்களின் அலட்சியத்தை காட்டுகிறது.... விபரீதமாக எதுவும் நடப்பதற்கு முன் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லதுமேலும்
-
தினந்தோறும் பாலியல் குற்ற சம்பவங்கள்; தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம்
-
தமிழகத்தில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைவு: உள்துறை செயலர், டிஜிபி பேட்டி
-
அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போர் முடிவுக்கு வர வேண்டுமா: 3 நிபந்தனை விதிக்கிறது ஈரான்
-
40 நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி: பற்றாக்குறை இல்லை என மத்திய அரசு உறுதி
-
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க வேறு நாட்டிடம் ஏன் அனுமதி வாங்க வேண்டும்: ராகுல் கேள்வி
-
மோனலிசாவிற்கு கல்யாணம்.