ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியாவுக்கு 1.35 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் உடன் வந்த கப்பல்
மும்பை: ஹார்முஸ் ஜலசந்தி வழியாக 1.35 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயுடன் லைபீரியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல், மும்பை வந்தடைந்தது. ஈரான் மீதான தாக்குதல் துவங்கிய பிறகு, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா வந்த முதல் கப்பல் இதுவாகும்.
@1brஇஸ்ரேல், அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதல் துவங்கிய பிறகு, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. பல நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சவுதியில் இருந்து கச்சா எண்ணெயுடன் கப்பல் ஒன்று மும்பை வந்தடைந்தது. ஈரான் மீதான தாக்குதலுக்கு பிறகு அவ்வழியாக வரும் முதல் கப்பல் இதுவாகும்.
மார்ச் 1ம் தேதி சவுதியின் ராஸ் தனுரா துறைமுகத்தில் இந்த கப்பலில் கச்சா எண்ணெய் நிரப்பப்பட்டது. மார்ச் 3ம் தேதி அங்கிருந்து கிளம்பியது. ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள அபாயத்தை கருத்தில் கொண்டு Automatic Identification System அமைப்பை 9 ம் தேதி அணைத்து வைத்தது. இந்த கருவி மூலம் தான் கப்பலின் அடையாளம், வேகம், அருகில் உள்ள கப்பல், அருகில் உள்ள துறைமுகங்களை அடையாளம் காண முடியும்.
1,35,335 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயுடன் இந்த கப்பல், மும்பை துறைமுகத்திற்கு நேற்று மதியம் 1 மணிக்கு வந்தடைந்தது. இந்த கச்சா எண்ணெய் கிழக்கு மும்பையின் மஹூல் பகுதியில் சுத்திகரிக்கப்பட உள்ளது.
கிரீசின் ஏதேன்சில் உள்ள டைனாகோம் டாங்கர் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த கப்பலின் கேப்டனாக இந்தியர் உள்ளார். மேலும், இந்தியா, பாகிஸ்தானை சேர்ந்த 28 பேர் மாலுமிகளாக பணியாற்றி வருகின்றனர். விரைவில் கப்பலில் இருந்து கச்சா எண்ணெய் இறக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர் கருத்து (10)
ராவுத்தர் இப்ராஹிம் - ,
12 மார்,2026 - 17:42 Report Abuse
பார்லிமெண்ட்ல ஒருத்தர் சும்மா ஜலசந்தி மூடப்பட்டு விட்டன அப்டின்னு அடிச்சு விட்டார். இதுதான் மூக்கருப்பு. deep ஸ்டேட் தலைவன் இதை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் 0
0
Reply
Easwar Kamal - New York,இந்தியா
12 மார்,2026 - 17:18 Report Abuse
trumper இந்த நியூஸ் தெரிஞ்ச செம கடுப்பு ஆயிருவரே 0
0
Reply
kulanthai kannan - ,
12 மார்,2026 - 17:18 Report Abuse
புள்ளி கூட்டணி காண்டாகி, ஈரானுக்கு கண்டனம் தெரிவிப்பார்கள். 0
0
Reply
அசோகன் - ,
12 மார்,2026 - 16:26 Report Abuse
இந்த மட்டும் எங்க சமுக நீதி முதலமைச்சர் செய்திருந்தால்.... செய்தி தாள்களின் அத்தனை பக்கத்திலும் முழு பக்க விளம்பரம் தமிழ் நாடு அரசு செலவில் செய்திருப்போம்...... எங்க நியூஸ் சேனல்களில் 24 மணிநேரம் இடைவிடா விவாதம் வைத்திருப்போம்..... ஊக்கறேனுக்கே பஸ் விட்டவங்களாக்கும் 0
0
Reply
Murali L - ,இந்தியா
12 மார்,2026 - 16:17 Report Abuse
நீ ஈரான் செய்திதான் தினமும் படிப்பியா ப்ரோ ? 0
0
Reply
Prabhakaran Rajan - Dubai,இந்தியா
12 மார்,2026 - 16:14 Report Abuse
ஜெய் ஹிந்து 0
0
Reply
Sivagiri - chennai,இந்தியா
12 மார்,2026 - 16:00 Report Abuse
0
0
Reply
jothimani - chennai,இந்தியா
12 மார்,2026 - 15:53 Report Abuse
ஈரான் வழியாக எந்த கப்பலும் வரவில்லை. மத்திய அரசு கூறியதாக வெளியான செய்தியை ஈரான் அரசு மறுத்துள்ளது. கச்சா எண்ணெய்யுடன் கப்பல் மும்பைக்கு வந்ததா, அல்லது இதுவும் போா் வதந்திதானா. 0
0
Reply
C G MAGESH - CHENNAI,இந்தியா
12 மார்,2026 - 15:40 Report Abuse
இந்திய கூலிபான்கள் இப்ப என்ன சொல்ல போறாங்க ? 0
0
Reply
Rajarajan - Thanjavur,இந்தியா
12 மார்,2026 - 15:32 Report Abuse
திரு. மோடியை இதற்காக பதவி விலக சொன்னவர்கள், இப்போது என்ன சொல்வார்கள் ?? சின்ன புள்ள தனமா இல்ல இருக்கு. 0
0
Reply
மேலும்
-
தினந்தோறும் பாலியல் குற்ற சம்பவங்கள்; தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம்
-
தமிழகத்தில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைவு: உள்துறை செயலர், டிஜிபி பேட்டி
-
அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போர் முடிவுக்கு வர வேண்டுமா: 3 நிபந்தனை விதிக்கிறது ஈரான்
-
40 நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி: பற்றாக்குறை இல்லை என மத்திய அரசு உறுதி
-
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க வேறு நாட்டிடம் ஏன் அனுமதி வாங்க வேண்டும்: ராகுல் கேள்வி
-
மோனலிசாவிற்கு கல்யாணம்.
Advertisement
Advertisement