நஞ்சுண்டேஸ்வரர் கோவில் 3ம் நாள் தேரோட்டம்
இடைப்பாடி: இடைப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் சித்திரை தேரோட்ட விழா கடந்த, 30ல் தொடங்கியது. 2ம் நாளான நேற்று முன்தினம், 3 தேர்களும், மேட்டுமாரியம்மன் கோவில் அருகே நிறுத்தப்பட்டன. தொடர்ந்து 3ம் நாளான நேற்று, அங்கிருந்து ஏராளமான பக்தர்கள், 3 தேர்களையும் வடம்
பிடித்து இழுத்துச்சென்றனர். முதல் தேரில் விநாயகர், 2வது தேரில் தேவகிரி அம்மனுடன் நஞ்சுண்டேஸ்வரர், 3ம் தேரில், வள்ளி, தெய்வானை
யுடன் முருகன் வலம் வந்தனர். பவானி சாலை வழியே சென்ற தேர்கள், பூலாம்பட்டி சாலையில் நிறுத்தப்பட்டன. இன்று இறுதி நாள் தேரோட்டம் நடக்கிறது.
சிவன், பார்வதி ஊர்வலம்சேலம், மல்லுார் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த, 30ல் தொடங்கியது. நேற்று முன்தினம் மல்லுார் அகரம் வெள்ளாஞ்செட்டியார் நலச்சங்கம் சார்பில் சிவன், பார்வதி, விநா-யகர், முருகன் அலங்காரத்துடன் டிராக்டரில் ஊர்வலம் நடந்தது.
மாரியம்மன் கோவிலில் தொடங்கிய ஊர்வலம், திருச்சி சாலை, பார்க் தெரு வழியே கோவிலை அடைந்தது. ஊர்வலத்துக்கு முன், பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. தலைவர் சுகுமார், செயலர் விஜயகுமார், இளைஞர், மகளிர் அணியினர், மக்கள் பங்கேற்றனர்.