உருக்காலை தனியார் மயத்தை கண்டித்து உண்ணாவிரதம்

சேலம்: சேலம் உருக்காலை நிர்வாகம், ஆலையின் முக்கிய உற்பத்தி பிரிவுகளின் மேலாண்மை மற்றும் பராமரிப்பு பணிகளை, ஒப்-பந்த முறையில் தனியாருக்கு விட முடிவு செய்துள்ளது. இதை கண்டித்து, உருக்காலை முன், சி.ஐ.டி.யு.,
தொழிற்சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்-தது.


சேலம் மாவட்ட தலைவர் குப்புசாமி தலைமை வகித்தார். அதில் பொதுச்செயலர் சுரேஷ்குமார் பேசுகையில், ''உருக்காலை நிர்வாகம் உற்பத்தி பிரிவுகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு விட முடிவு செய்-துள்ளது. இச்செயல், மறைமுகமாக உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சி. அதனால் ஒருநாள் அடையாள உண்ணா-விரத போராட்டம் நடக்கிறது,'' என்றார்.
துணைத்தலைவர் பன்னீர்செல்வம், உருக்காலை தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement