8 தொகுதியில் களத்தில் உள்ள 118 வேட்பாளர்
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளில் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என, 118 பேர் களத்தில் உள்ளனர். கடந்த, 23ல் பதிவான ஓட்டுகள் நாளை இரு மையங்களில் எண்ணப்பட்டு, மதியம், 3:00 முதல், 5:00 மணிக்குள் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விபரம் தெரியவரும். தொகுதி வாரியாக வேட்பாளர்கள் விபரம்:
ஈரோடு கிழக்கில், 20 வேட்பாளர் உள்ளனர். மொத்த வாக்காளர்கள், 1,79,566ல், 1,61,242 பேர் ஓட்டுப்பதிவானது. இங்கு, காங்., - கோபிநாத், அ.தி.மு.க., - ஆர்.மனோகரன், த.வெ.க., - விஜய் பாலாஜி, நா.த.க., - தாண்டவமூர்த்தி, பகுஜன் சமாஜ் கட்சி - பி.சித்ரா, - கமல்குமார் - விஸ்வ தமிழ் கழகம், வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சி - தண்டபாணி, தமிழக மக்கள் நலக்கட்சி - தவசியப்பன், தமிழக வாழ்வுரிமை கட்சி - ஏ.மணிகண்டன், சாமானிய மக்கள் நலக்கட்சி - கே.மணிகண்டன், சுயேட்சைகள், எம்.வி.கார்த்தி, பி.சண்முகம், தரணிகுமார், சி.தியாகராஜன், நதியா, முகம்மது கைபர், முத்துபாவா, எம்.முருகேசன், லட்சுமிநாதன், ஆர்.வைரம், என
வேட்பாளர்கள் உள்ளனர்.
ஈரோடு மேற்கில், 13 வேட்பாளர்கள் உள்ளனர். இங்கு மொத்த வாக்கு - 2,50,177; பதிவானது - 2,20,117. இங்கு, பகுஜன் சமாஜ் கட்சி - வே.பழனி, தி.மு.க., - சு.முத்துசாமி, பா.ஜ., - எம்.யுவராஜா, த.வெ.க., - ஆனந்தமோகன், நா.த.க., - விஜய், பார்ட்டி பார் தி ரைட்ஸ் ஆப் அதர் பேக்வேர்டு கிளாசஸ் - கலையரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி - வ.தன
லட்சுமி, விஸ்வ தமிழ் கழகம் - எம்.நடராஜ், சாமானிய மக்கள் நலக்கட்சி - ம.ருக்மணி, சுயேட்சைகள், சண்முகம், மூர்த்தி, அ.ராமு,
சி.ராஜேந்திரன்.
மொடக்குறிச்சியில், 14 வேட்பாளர் உள்ளனர். மொத்த வாக்காளர்கள், 2,07,664ல், 1,87,607 ஓட்டுகள் பதிவானது. இதில், நா.த.க., - எம்.அருண்குமார், பா.ஜ., - எஸ்.கிருத்திகா, தி.மு.க., - எஸ்.செந்தில்நாதன், பகுஜன் சமாஜ் கட்சி கே.முனியப்பன், தமிழக வாழ்வுரிமை கட்சி - ஆர்.கார்த்திகேயன், த.வெ.க., - டி.சண்முகன், நமது கொங்கு முன்னேற்ற கழகம் - எம்.ரமேஷ், கனசங்கம் பார்ட்டி ஆப் இந்தியா - எம்.ரவிகுமார், சுயேட்சைகள், ஏ.கதிர்வேல், கே.தனபால், ஏ.துரைசாமி,
ஆர்.நடராஜன், எல்.பாரதி,
ஆர்.வேலுசாமி.
பெருந்துறையில், 13 வேட்பாளர் உள்ளனர். மொத்த வாக்காளர்கள், 2,14,431ல், 1,98,276 ஓட்டுகள் பதிவானது. இதில், பகுஜன் சமாஜ் கட்சி - ப.ஈஸ்வரன், நா.த.க., - ஈங்கூர் சி.லோகநாதன், தி.மு.க., - தோப்பு வெங்கடாசலம், அ.தி.மு.க., எஸ்.ஜெயகுமார், த.வெ.க., - வி.பி.அருணாசலம், தமிழக வாழ்வுரிமை கட்சி - சி.சந்தோஷ்கிருஷ்ணன், சாமானிய மக்கள் கட்சி - பா.வளர்மதி, சுயேட்சைகள், எஸ்.சந்தோஷ், மா.செல்வராசு, எம்.பழனிசாமி, சி.வெங்கடாசலம், அ.ஜார்ஜ் ஸ்டீபன், கே.ஜெயபிரகாஷ்.
பவானியில், 14 வேட்பாளர் உள்ளனர். மொத்த வாக்காளர்கள், 2,23,172 ல், 2,05,133 ஓட்டுகள் பதிவானது. அ.தி.மு.க., - கே.சி.கருப்பண்ணன், தி.மு.க., - கே.ஏ.சந்திரசேகர், பகுஜன் சமாஜ் கட்சி - கே.சேகர், நா.த.க., - ஆர்.மோகனாதேவி, சாமானிய மக்கள் நலக்கட்சி - பி.பராசக்தி, தமிழக வாழ்வுரிமை கட்சி - பி.கே.பழனிசாமி, த.வெ.க., - பாலகிருஷ்ணன், மக்கள் முன்னேற்ற கட்சி - ஆர்.விமல்ராஜ், சுயேட்சைகள், பி.வி.ஆறுமுகம், எம்.கண்ணன், பி.கார்த்திகேயன், எம்.பூபதி ராஜராஜசோழன், வி.எம்.பெருமாள், பி.மாணிக்கம்.
அந்தியூரில், 14 வேட்பாளர் உள்ளனர். மொத்த வாக்காளர், 2,07,355ல், 1,82,940 ஓட்டுகள் பதிவானது. இதில் நா.த.கா., - ஆலங்கட்டூர் ஆனந்தி, பகுஜன் சமாஜ் கட்சி - கே.கவிபாரதி, தி.மு.க., - எம்.சிவபாலன், அ.தி.மு.க., - பி.ஹரிபாஸ்கர், சாமானிய மக்கள் நலக்கட்சி - எஸ்.ராமசாமி, தமிழக வாழ்வுரிமை கட்சி - கே.ஈஸ்வரமூர்த்தி, அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் - எஸ்.சி.ஆர்.கோபால், த.வெ.க., - எம்.விஜய் வெங்கடேஷ், சுயேட்சைகள், எம்.கார்த்தி, கே.ஏ.சங்கர்குமார், ஏ.செல்வி, சி.தனபால், கே.வீரன், ஏ.எம்.சேக்தாவூத்.
கோபியில், 18 வேட்பாளர் உள்ளனர். மொத்த வாக்காளர், 2,39,179ல், 2,16,910 ஓட்டு பதிவானது. இதில் நா.த.க., - மா.கி.சீதாலட்சுமி, தி.மு.க., - என்.நல்லசிவம், அ.தி.மு.க., - வி.பி.பிரபு, பகுஜன் சமாஜ் கட்சி - ர.ரவிகுமார், த.வெ.க., - கே.ஏ.செங்கோட்டையன், தமிழக வாழ்வுரிமை கட்சி - மு.திருவெங்கடேஷ், ஓ.பி.சி.மக்கள் உரிமை கட்சி - மலர்விழி, சுயேட்சைகள், மு.ஆனந்தகுமார், கு.சக்திவேல், ஜி.சண்முகம், ரா.சீதா, க.சுமதி, ர.செல்வகுமார், க.தனபால், பழனிசாமிராஜ், ஏ.புவனேஸ்வரி, பா.ரமேஷ், வெங்கடாசலம்.
பவானிசாகரில், 12 வேட்பாளர் உள்ளனர். மொத்த வாக்காளர், 2,37,613ல், 2,12,332 ஓட்டுகள் பதிவானது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - பி.எல்.சுந்தரம், நா.த.க., - சவுந்தர்யா, அ.தி.மு.க., - ஏ.பண்ணாரி, பகுஜன் சமாஜ் கட்சி - பி.பழனிசுவாமி, த.வெ.க., - வி.பி.தமிழ்செல்வி, அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் - ராக்கி - சுயேட்சைகள், ஏ.அம்ரீஷ், எம்.கோபாலன், எஸ்.பழனிசுவாமி, சி.பழனி
சாமி, ராமகிருஷ்ணன்,
டாக்டர் சி.ஹனுமையா.
எட்டு தொகுதியில் மொத்தம், 17.59 லட்சம் ஓட்டுகளில், 15 லட்சத்து, 84,947 ஓட்டு பதிவானது. தவிர, 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், 7,100 தபால் ஓட்டு பதிவு செய்துள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளோர், ராணுவம் என சேவை பணியில் உள்ளோர் தபால் ஓட்டுக்கள் தொகுதி வாரியாக இனி சேர்க்கப்படும்.