ஓட்டு எண்ணும் மையத்தின் பிற வழிகள் அடைப்பு
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரியில், ஆறு தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை நாளை நடக்கிறது. மைய வளாகத்தில் பிற அலுவலகம், குடியிருப்புகள் உள்ளதால், அவர்கள் ஓட்டு எண்ணும் நாளில் பிரதான மற்றும் கல்லுாரியின் பின்புற வழியை பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரோட்டில் இருந்து சித்தோடு, 4 வழிச்சாலை வழியாக பவானி செல்லும்போது, கல்லுாரி பிரதான வாயிலுக்கு முன்பாகவே குடியிருப்பு மற்றும் கல்லுாரி பின்புறம் செல்லும் குறுகிய சாலையில் பேரிகார்டு அமைத்து போலீஸ் போடப்பட்டுள்ளது. குடியிருப்புவாசிகள் தவிர மற்றவர்களுக்கு அங்கு அனுமதி இல்லை.
அதுபோல, பவானியில் இருந்து வலது புறமாக வரும் சர்வீஸ் சாலை வழியாகவும், கல்லுாரிக்கு பின்புறம் செல்லலாம். அவ்வழியும் பேரிக்கார்டு வைத்தும், கயிறு கட்டியும் அடைக்கப்படும்.
ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின், வழக்கம் போல செயல்பாட்டுக்காக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.