திருப்புவனத்தில் நிலக்கடலை சாகுபடி அதிகரிக்க வேண்டும்

திருப்புவனம்:திருப்புவனம் தாலுகாவில் நிலக்கடலை சாகுபடி பரப்பளவை அதிகரிக்க வேளாண் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் ஜூன் மாதம் தொடங்கி செப்., வரை நிலக்கடலை பயிரிடும் பணி தொடங்கும். நாடு, கம்பெனி, ஆந்திரா நிலக்கடலை மூன்று ரகங்கள் இருந்தாலும் நாட்டு நிலக்கடலைதான் அதிகம் பயிரிடுவார்கள். நாட்டு நிலக்கடலை ருசியாகவும் எண்ணை சத்து மிக்கதாகவும் இருக்கும். எண்ணெய் தயாரிக்க இந்த நிலக்கடலையைதான் வியாபாரிகள் வாங்குவார்கள். திருப்புவனம் தாலுகாவில் முக்குடி, பறையங்குளம், செங்குளம், காஞ்சரங்குளம், ஓடாத்தூர், பழையனூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் வரை நிலக்கடலை பயிரிட்டு வந்தனர். நிலக்கடலை செடியில் சுருள் பூச்சி தாக்குதல், விளைச்சலுக்கு வரும் நேரத்தில் பன்றி தொல்லை காரணமாக விவசாயிகள் நிலக்கடலை பயிரிடுவதை நிறுத்திவிட்டனர்.

விதை நிலக்கடலை கிலோ 100 முதல் 130 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. நிலக்கடலைக்கு வேளான் துறை சார்பில் கிலோவிற்கு 21 சதவிகிதம் அல்லது 40 ரூபாய் மான்யம் வழங்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை. ஆண்டுதோறும் மான்யத்தில் மாற்றமும் இருக்கும் , இதனால் விவசாயிகள் தனியார் உர கடைகளில் விதை கடலை வாங்கி பயிரிடுகின்றனர். 2023- - 2024 ல் ஆயிரத்து 650, 2024 -- 25 ல் ஆயிரத்து 600 கிலோவும் மானியத்தில் வழங்கப்பட்டது. இந்தாண்டுக்குரிய விதை கடலை இன்னும் வரவில்லை.

////

Advertisement