பஸ் நிலைய கட்டணக் கழிவறையில் பராமரிப்பின்றி பயணிகள் அவதி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பழைய பஸ் நிலைய கட்டணக் கழிவறையில் முறையாக பராமரிக்காததால் பயங்கர துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
கள்ளக்குறிச்சி பழைய பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு சுற்று வட்டார கிராமங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதனால், எப்போது பார்த்தாலும் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.
இந்நிலையில் பஸ் நிலையத்தில் உள்ள இரு கட்டணக்கழிவறையில் பயணிகள் 10 ரூபாய் கட்டணம் செலுத்தி இயற்கை உபாதை கழிக்கச் செல்கின்றனர். ஆனால் முறையாக பராமரிப்பு இன்றி இருப்பதால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. இதனால், தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.
எனவே, பயணிகள் அதிகளவில் பயன்படுத்த கூடிய கட்டணக் கழிவறையை முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement