கடலுாரில் போலீசார் கொடி அணிவகுப்பு
கடலுார்: கடலுாரில் போலீசார், துணை ராணுவ படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர்.
கடலுார் மாவட்டத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று கடலுார், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் என, 4 மையங்களில் நடக்கிறது. இதற்காக ஓட்டு எண்ணிக்கை மையங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கடலுார் மற்றும் குறிஞ்சிப்பாடி தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் கடலுார் அரசு பெரியார் கல்லுாரியின் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் எண்ணப்படுகிறது.
இதனை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வெளியில் நடமாடலாம் என்பதை உறுதி செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலுார் டவுன்ஹால் அருகில் இருந்து டி.எஸ்.பி.,தமிழ் இனியன் தலைமையில் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் இணைந்து முக்கிய வீதிகளில் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement